Ex Minister Jayakumar: கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை ஜார்ஜ் டவுணில் உள்ள மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்பாக நேரில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார்.
Ex Minister Jayakumar: 22 நாள்கள் சிறை
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "உள்ளாட்சி தேர்தலின் போது கள்ள ஓட்டு போட முயன்ற திமுகவை சேர்ந்த நபரை காவல்துறையிடம் ஒப்படைத்தோம். ஆனால் அந்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் என் மீது பொய் வழக்கு புனையப்பட்டு, 22 நாட்கள் புழல் மற்றும் பூந்தமல்லி சிறைச்சாலையில் அடைத்துவைக்கப்பட்டேன்.
பல்வேறு பொறுப்புகளை வகித்த எனக்கு சிறையில் முதல் வகுப்பு அளிக்காமல் அதன் பின்பு வழக்கறிஞர்கள் எடுத்துரைத்த பிறகு முதல் வகுப்பு கொடுத்தார்கள். ஆனால் அதிலும் எந்தவிதமான சலுகைகளும் கிடையாது. பொய் வழக்கு புனையட்டு நீதிமன்றத்தை மதிக்க வேண்டும் என்பதற்காக இன்றைய தினத்தில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி உள்ளேன்.
Ex Minister Jayakumar: 1983இல் முதல்முறையாக வந்தேன்
ஜார்ஜ் டவுண் நீதிமன்றத்தை பொறுத்தவரை 1983ஆம் ஆண்டு இந்த நீதிமன்றத்தில் ஆஜரானேன். தற்போது பல வருடங்கள் கழித்து இதே ஜிடி கோர்ட்டில் ஆஜராகி உள்ளேன். அதனை தொடர்ந்து தான் பல்வேறு உயர் பொறுப்புகளை பெற்றேன், கால சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. இதை வைத்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், எதிர்காலம் எங்களுக்கு எவ்வளவு பிரகாசமாக இருக்கிறது என்று...
Ex Minister Jayakumar: திமுகவுக்கு அருகதை இல்லை
மாநில உரிமைகளை பாதுகாக்க உயர்மட்ட நிலைக்குழுவை முதலமைச்சர் அமைத்திருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "யார் எந்த தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்ற விவஸ்தை இல்லாமல் போச்சு... இவர்கள் கண்ணாடி முன் நின்று தங்களை கேட்டுக் கொள்ள வேண்டும். தீர்மானம் போடுவதற்கு நாம் தகுதி ஆனவர்களா என்று... அன்றைக்கு சர்க்காரியா கமிட்டிக்கு பயந்து இந்திரா காந்தி அம்மையாருடன் சேர்ந்து கச்சத்தீவை தாரை வார்த்தார்கள். இன்றைக்கும் மீனவர்கள் சிறையில் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். முதலை கண்ணீர் வடிப்பது போல கச்சத்தீவு தாரைவார்த்துவிட்டு இப்போது தீர்மானம் கொண்டு வருகிறார்கள்.
மாநிலத்தின் உரிமைகளை எல்லாம் தாரைவார்த்துவிட்டு இன்றைக்கு தேர்தல் வருகிறது என்பதற்காக மாநில சுயாட்சி தீர்மானம் கொண்டு வருகிறார்கள். இதனை மக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். திராவிடம் என கூறிக்கொண்டு மக்களை ஏமாற்ற ஒரு மோசமான செயல் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த ஜெயக்குமார், அதிமுக பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு இரண்டாவது முறையாக பதிலளிக்காமல் சென்றார். கூட்டணி குறித்து தெளிவாக பொதுச்செயலாளர் (எடப்பாடி பழனிசாமி) பேசியுள்ளார் என ஜெயக்குமார் மழுப்பலாக பேசினார்.
முன்னதாக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒன்றிய - மாநில அரசுகளின் உறவை ஆராய்ந்து, மாநில உரிமைகளை பாதுகாக்க ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்ட நிலைக்குழு அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். முதலமைச்சரின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அதிமுக முன்னாள் அமைச்சருக்கு சிக்கல்! சட்ட நடவடிக்கை எடுக்க ஆளுனர் ஒப்புதல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ