Tirunelveli Honour Killing Case Fact Check : திருநெல்வேலியில் இளைஞர் கவின் படுகொலை செய்யப்பட்ட வழக்கு குறித்து அதிர்ச்சிகரமான விஷயங்கள் வெளிவர துவங்கி இருக்கின்றன. இதில் வலம் வரும் ஒரு தகவல் உண்மையா இல்லையா என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

Tirunelveli Honour Killing Case Fact Check : இந்த வருடத்தில் தமிழ் நாட்டையே பெரிதும் உலுக்கியிருக்கும் சம்பவமாக இருக்கிறது, திருநெல்வேலி கவின் ஆணவக்கொலை வழக்கு. சென்னையில் தங்கி பணிபுரியும் ஐ.டி.ஊழியரான கவின், திருநெல்வேலியில் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, இவர் வழக்கில் அடுத்தடுத்து முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
நெல்லை ஆணவக்கொலை வழக்கு:
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த தம்பதி, சந்திரசேகர்-செல்வி. இவர்களின் மூத்த மகனான கவின், பொறியில் பட்டதாரி. 27 வயதான இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் டெக் மென்பொருள் நிறுவனத்தில் நல்ல பதவியில் பணிபுரிந்து வந்தார். கவின், சிறுவயது முதலே, திருநெல்வேலி கே.டி.சி நகர் பகுதி அருகே இருக்கும் அஷ்டலட்சுமி நகரை சேர்ந்த பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண், சித்த மருத்துவராக நெல்லையில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஜூலை 27ஆம் தேதியன்று கவின் மற்றும் அவரது தாய் ஆகியோர் உடல்நிலை சரியில்லாத தனது தாத்தாவை மருத்துவம் பார்ப்பதற்காக தனது தோழியின் சித்த மருத்துவ நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கே வந்த சித்த மருத்துவரின் தம்பி சுர்ஜித் என்பவர் கவினிடம் தனியாக பேச வேண்டுமென அழைத்துள்ளார்.
கவினை தனியாக அழைத்து சென்று, தனது சகோதரியை மறந்து விடுமாறு சுர்ஜித் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதை ஏற்க சுர்ஜித் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், அவரை அரிவாளால் வெட்டி கொன்றுவிட்டு சுர்ஜித், காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கவினை காதலிக்கவில்லை என்று கூறிய காதலி?
கவின் உயிரிழந்ததை அடுத்து, அவரது நண்பர்கள் அவர் குறித்த எமோஷனல் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். ஒரு சிலர், கவினுடன் சம்பந்தப்பட்ட அந்த பெண்ணின் பெயர் மற்றும் புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கின்றனர். ஒரு சிலர், அந்த பெண் “நான் கவினை காதலிக்கவே இல்லை” என்று கூறியதாக பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து, தமிழ் நாட்டின் Fact Check இயக்குநர் ஐயன் கார்த்திகேயன் இது குறித்த ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில், “'கவினை காதலிக்கவில்லை' என்று அந்தப் பெண் சொன்னதாக செய்தி ஒன்று வெளியாகி,
'கவினை காதலிக்கவில்லை' என்று அந்தப் பெண் சொன்னதாக செய்தி ஒன்று வெளியாகி,
— Iyan Karthikeyan (@Iyankarthikeyan) July 29, 2025
பின் அப்பெண்ணின் புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது.
1. அவ்வாறு காவல்துறையினரிடம் தெரிவித்தார் என உறுதிப்படுத்தி அதிகாரப்பூர்வமாக வரவில்லை!
2. பெண் அவ்வாறு எங்கேயும் பதிவு செய்யவில்லை
3.அப்படி அந்தப்…
பின் அப்பெண்ணின் புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது.
1. அவ்வாறு காவல்துறையினரிடம் தெரிவித்தார் என உறுதிப்படுத்தி அதிகாரப்பூர்வமாக வரவில்லை!
2. பெண் அவ்வாறு எங்கேயும் பதிவு செய்யவில்லை
3.அப்படி அந்தப் பெண் தெரிவிக்கவில்லை என்று காவல்துறை உயர் அதிகாரி மூலம் என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது . பரவுவது முற்றிலும் தவறான செய்தி
இது மோசமான பத்திரிகைத்துறை, மக்கள் அதற்கு அடிமையாகிவிட்டனர். இப்போது, கும்பல் மனநிலை அவரது அந்தரங்க புகைப்படங்களைப் பரப்புவதற்கு வழிவகுத்துள்ளது - சிலர் அவற்றை கவிதைகளுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். அவசரப்படுறிங்க, தப்புத் தப்பா போகுது. Judgemental -ஆ இருக்கோம் .
தயவு செய்து நிதானமாக எதையும் செய்யுங்கள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், “இது எனது தொழில்முறை எல்லைக்கு அப்பாற்பட்டது என்றாலும், இதைச் சொல்ல நான் நிர்பந்திக்கப்படுகிறேன். ஒரு பாதிக்கப்பட்டவரின் பெயர் இவ்வாறு இறந்த பின்பும் தவறாக பிரயோகிக்கப்படுவதை பார்ப்பது வருத்தமளிக்கிறது.
சிறந்த மனிதர்களாக இருக்க பாடுபடுவோம். மற்றவர்களை நியாயந்தீர்ப்பதையோ அல்லது ரத்து செய்ய அவசரப்படுவதையோ தவிர்க்கவும்” காவல்துறை தரப்பில் இருந்து அந்த பெண் அப்படி கூறியதாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
சுர்ஜித் தந்தை கைது:
கொலையாளி சுர்ஜித்தின் எஸ்.ஐ தந்தை சரவணன் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, இவ்வழக்கு குறித்த விசாரணையானது தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ