சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அருகே உள்ள மடப்புரத்தில் பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த காவலாளி அஜித்குமார் (27) என்ற இளைஞரை போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 27) கைது செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் அவரது காரை பார்க்கிங் செய்யும்படி கூறி அஜித்குமாரிடம் சாவி கொடுத்ததாகவும், அதன்பின் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அந்த பக்தர் காரில் சென்று பார்த்தபோது அங்கு இருந்த 10 பவுன் நகை மற்றும் பணம் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.
விசாரணையில் போலீசார் அஜித்குமாரை கடுமையாக தாக்கியதாகவும் இதனால் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அவரது உடலை உடற்கூராய்வு பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தினரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் இளைஞர் உயிரிழந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவத்தை தொடர்ந்து ஆளுங்கட்சியான திமுகவை எதிர்கட்சி உட்பட பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் Justice For Ajithkumar என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்டாகி வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக 5 போலீசார் கைது நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கைதான 5 போலீசாரின் குடும்பத்தினர் திருப்புவனம் காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நாங்களும் பொதுமக்கள் தான். சாப்பிடாமல், தூங்காமல் வேலைப் பார்த்த எங்கள் கணவர்களுக்கு இதுதான் தண்டனையா? உயர் அதிகாரிகள் சொன்னதைதானே செய்தார்கள். எங்களுக்கும் உயிரிழந்த இளைஞருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எங்களுக்கு நீதி வேண்டும். 5 குடும்பத்திற்கும் நீதி வேண்டும் என கதறி அழுதனர்.
இதற்கிடையில் இளைஞர் அஜித்குமார் தாக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் காக்கி சட்டை அணியாத காவலர்கள், இளைஞர் அஜித்குமாரை சரமாரியாக தாக்குகின்றனர். இந்த வீடியோ அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் படிங்க: சிவகங்கை இளைஞர் மரணம்! முதல்வர் முக ஸ்டாலினுக்கு விஜய் நேரடி கேள்வி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









