Asmitha Makeover Artistry Husband Vishnu Issue : இன்ஸ்டாவில் மிகவும் பிரபலமான மேக்-அப் ஆர்டிஸ்ட்-ன் கணவர் தான் ஸ்ரீ விஷ்ணுகுமார். இவரும் இன்ஸ்டா பிரபலம் தான். சொந்தமாக இயற்கை அழகு சாதன பொருட்களை விற்பனை செய்து வருகிறார். கிட்டதட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் பாலோயர்ஸ்களை கொண்டுள்ள இவர், சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். விஜய்யின் தீவிர ஆதரவாளரான இவர், தவெக நிர்வாகி என்றும் கூறப்படுகிறது. அதோடு இவர் தவெகவின் விர்சுவல் வாரியர் என்றும் சொல்லப்படுகிறது.
இன்ஸ்டா பிரபலம்:
இன்ஸ்டாவில் மிகவும் பிரபலமான மேக்-அப் ஆர்டிஸ்ட்-ன் கணவர் தான் ஸ்ரீ விஷ்ணுகுமார். இவரும் இன்ஸ்டா பிரபலம் தான். சொந்தமாக இயற்கை அழகு சாதன பொருட்களை விற்பனை செய்து வருகிறார். கிட்டதட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் பாலோயர்ஸ்களை கொண்டுள்ள இவர், சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். விஜய்யின் தீவிர ஆதரவாளரான இவர், தவெக நிர்வாகி என்றும் கூறப்படுகிறது. அதோடு இவர் தவெகவின் விர்சுவல் வாரியர் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது, சமீபத்தில் விஜய் தனது தவெக நிர்வாகிகள் யாரெல்லாம் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கின்றனரோ அவர்களை Virtual Warrior என்று குறிப்பிட்டிருந்தார். இதில், விஷ்ணுவும் ஒருவர்.
இந்த நிலையில் தான் தற்போது ஒரு பெரிய சம்பவத்தில் விஷ்ணு சிக்கியுள்ளார். தனது நண்பரின் தங்கையிடம் அத்துமீறி மெசேஜ் செய்ததாகவும், அதன்பிறகு அந்த பெண்ணை சந்திக்க வீட்டுக்கு சென்ற போது அந்த பெண்ணின் அண்ணன்கள் சுத்து போட்டு அவரை கிழித்துள்ளனர். அவரை உட்கார வைத்து கேள்வி மேல் கேள்வி கேட்டு அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இது வைரலான நிலையில், பலரும் இவரை விமர்சித்து வருகின்றனர். இந்த வீடியோ குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், அவர் அந்த பெண்ணின் அனுமதியின்றி மெசேஜ் செய்தாரா அல்லது இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.
ட்ரேடிங்கில் ஏமாற்றியிருக்கிறாரா?
இதே விஷ்ணுதான் சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் ட்ரேடிங் மூலமாக சிலரை சிக்க வைத்து, அவர்களின் பணத்தை ஏமாற்றியதாக கூறப்பட்டது. இதில் ஏமாந்த சிலர் இவர் மீது புகாரும் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் தற்போது இப்படிப்பட்ட வீடியோ வைரலாகி இருக்கிறது. இதனை திசை திருப்பும் நோக்கத்தோடு இப்படி ஒரு வீடியோ ஸ்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. இருப்பினும் இது குறித்த உண்மை தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பகல்காம் தாக்குதல்.. 'மத வெறுப்பாக திசை திருப்ப வேண்டாம்'.. ஆண்ட்ரியா வருத்தம்!
மேலும் படிக்க | ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் விஜய் ரியாக்ஷன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ