)
வடசென்னையை சேர்ந்த பிரபல A+ ரவுடி காதுகுத்து ரவி,இவர் மீது வட சென்னைக்கு உட்பட்ட காவல் நிலையங்களிலும் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை,கொலை முயற்சி,கட்ட பஞ்சாயத்து உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.
அக்கரை பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு கொலை வழக்கில் சிறைக்கு சென்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வந்ததால் நீதிமன்ற உத்தரவின் பேரில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நிதீமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த காதுகுத்து ரவியை நீலாங்கரை மற்றும் சென்னை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் அவர்களின் GANGSTAR போலீசார் அக்கரை பகுதியில் ஒரு வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னை காவல் ஆணையர் GANGSTAR போலீசார் மற்றும் நீலாங்கரை தனிப்படை போலீசார் விரைந்தனர் வைத்து கைது செய்து பிரபல A + ரவுடி காதுகுத்து ரவியை கைது செய்து நீலாங்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அப்போது காதுகுத்து ரவி தங்கியிருந்த வீட்டை சோதனை செய்த போது 10 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருந்தததின் அடிப்படையில் போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார் வடசென்னையை சேர்ந்த பிரபல A+ ரவுடி காதுகுத்து ரவி மீது வழக்குப் பதிவு செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ரவுடி ரவிக்கு மெத்தபட்டமையின் போதை பொருள் எங்கிருந்து கிடைத்தது யார் இவருக்கு சப்ளை பண்ணது என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ