“ நடனமாட சொல்லி ஆரவாரம் செய்த ரசிகர்கள் ; கோபப்பட்ட நடிகை ஆண்ட்ரியா ”..!
சேலத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் கலந்து கொண்ட நடிகை ஆண்ட்ரியாவை காணவந்த ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் போலீசாரால் தடியடி நடத்தப்பட்டது.
சேலம் மாவட்டம் மல்லூர் வேங்காம்பட்டி கோயில் திருவிழாவின் கடைசி நாளில் திரைத்துறையினர் இசைக் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரபல தமிழ் சினிமா நடிகையும் பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியா அவர்கள் கலந்து கொள்வதாக பல்வேறு விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் நடன நிகழ்ச்சியை காண்பதற்குக் கூடிய கூட்டத்தை விட ஆண்ட்ரியாவை காண்பதற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்து காத்திருந்தனர். பின்னர் திருவிழாவிற்கு வருகை தந்தை ஆண்ட்ரியாவின் காரை சுற்றி வளைத்த ரசிகர்களால் கீழே இறங்க முடியாமல் அவர் பெரும் அவதிக்குள்ளானார்.
அதனால் காவலர்கள் லேசான தடியடி நடத்த வேண்டிய நிலைமை உண்டானது. பின்பு மேடைக்கு வந்த ஆண்ட்ரியாவை ரசிகர்கள் ஆரவாரம் பொங்க விசிலடித்து நடனமாடி வரவேற்றனர். அதன் பிறகு அவர் பாடிய பிரபல பாடலான ஓ சொல்றியா மாமா பாடலைப் பாடினார். அதில். ரசிகர்கள் அளவில்லாமல் ஆர்ப்பரித்தது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். பாடலை பாடி முடித்தவுடன் நடனமாட வேண்டும் என்று ரசிகர்கள் கத்திய நிலையில் கடுப்பான ஆண்ட்ரியா கோமடைந்தார்.
மேலும் படிக்க | விவாகரத்துக்கு பிறகு சமந்தா நடிக்கும் புதிய படம்!
இதனால் அவரை சக திரைப்படத்துறையினர் சமாதானம் செய்து மீண்டும் இன்னொரு பாடலைப் பாட வைத்தனர். அப்போது ரசிகர்களின் சேட்டைகள் எல்லைமீறி அதிகரித்துப்போனது. அராஜகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் இருந்து நடிகை ஆண்ட்ரியா கிளம்பினார். ஆண்ட்ரியாவைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூட்டம் கூடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க | ராஷ்மிகா மந்தனாவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR