)
சங்கரன்கோவில்: திருவேங்கடம் அருகே பறவைகளை கட்டுப்படுத்த எலி மருந்து வைத்த நிலையில் அதை தேசிய பறவையான மயில்கள் உட்கொண்டதால் 50க்கும் மேற்பட்ட மயில்கள் பரிதாபமாக பலியாயின. விவசாயி ஜான்சனை வனத்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் மற்றும் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது மக்காச்சோளம், உளுந்து, பாசி பயறு, நிலக்கடலை, கானம், கேழ்வரகு உள்ளிட்ட பல்வேறு மானவாரி பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இந்த பயிர்களை காட்டுப் பன்றிகள், பறவைகள் உள்ளிட்ட வன உயிரினங்கள் விளை நிலங்களுக்குள் புகுந்து சேதமாக்கி வருவதால் அதை கட்டுப்படுத்த விவசாயிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குருவிகுளம் அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஜான்சன் ஒரு ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். தற்போது நன்கு பயிர் வளர்ந்து வரும் நிலையில் அதை பறவை இனங்களில் இருந்து கட்டுப்படுத்துவதற்காக, அவர் வயலை சுற்றி எலி மருந்துகளை வைத்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த மருந்துகளை தேசிய பறவையான மயில்கள் உட்கொண்டதால் 50க்கும் மேற்பட்ட மயில்கள் செத்து மடிந்தன. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த புளியங்குடி வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த மயில்களை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர்.
மேலும் சட்ட விரோதமாக எலிமருந்து வைத்த விவசாயியை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாய நிலங்களை பாதுகாக்க எலி மருந்து வைத்த விவசாயி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ