கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

Festival Special Trains: கிறிஸ்துமஸ்-புத்தாண்டு காலத்தில் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே பண்டிகை சிறப்பு ரயில் சேவைகளை அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்கள், தெற்கு ரயில்வே, கிறிஸ்துமஸ் புத்தாண்டு ரயில்கள், நாகர்கோவில் மட்காவ் சிறப்பு ரயில், தூத்துக்குடி மைசூரு சிறப்பு ரயில், பண்டிகைக் கால ரயில்கள், ரயில் முன்பதிவு பற்றிய முழுத் தகவல்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 10, 2025, 12:47 PM IST
  • பண்டிகைக் கால சிறப்பு ரயில்கள் 2025-2026: நாகர்கோவில்-மட்காவ், தூத்துக்குடி-மைசூரு சேவைகள்
  • கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கூட்டத்தைச் சமாளிக்க தெற்கு ரயில்வேயின் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
  • பயணம் எளிதானது: தெற்கு ரயில்வேயின் பண்டிகைக்கால சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள்
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

Southern Railway Special Trains: டிசம்பர் 2025 மற்றும் ஜனவரி 2026 மாதங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலங்களில் பயணிகளின் கூட்டத்தைச் சமாளிக்க, தெற்கு ரயில்வே நாகர்கோவில் மற்றும் மட்காவ் சந்திப்பு இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் சேவைகளை இயக்க உள்ளது. மேலும் தூத்துக்குடி மற்றும் மைசூரு இடையே சிறப்பு ரயில் சேவைகளை அறிவித்துள்ளது. அதன் விவரங்களை பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

மைசூரு-தூத்துக்குடி சிறப்பு ரயில் நேரம் மற்றும் நாள்:

மைசூரு-தூத்துக்குடி சிறப்பு ரயில் (ரயில் எண் 06283) டிசம்பர் 23 மற்றும் 27 ஆம் தேதிகளில் இயக்கப்படும். மைசூருவிலிருந்து மாலை 6.35 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடியை அடையும். 

தூத்துக்குடி-மைசூரு சிறப்பு ரயில் (ரயில் எண் 06284), டிசம்பர் 24 மற்றும் 28 ஆம் தேதிகளில் இயக்கப்படும். தூத்துக்குடியிலிருந்து பிற்பகல் 2 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு மைசூருவை வந்தடையும்.

தூத்துக்குடி-மைசூரு சிறப்பு ரயில் எந்த வழியாக செல்லும்?

தமிழ்நாட்டில் தூத்துக்குடி-மைசூரு சிறப்பு ரயில் சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

தூத்துக்குடி-மைசூரு சிறப்பு ரயில்  முன்பதிவு:

ஆன்லைன் தளங்கள் மற்றும் முன்பதிவு கவுண்டர்கள் உள்ளிட்ட வழக்கமான சேவைகள் மூலம் டிசம்பர் 10 ஆம் தேதி காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கும்.

நாகர்கோவில் சந்திப்பு - மட்கான் சிறப்பு ரயில் விவரம்:

நாகர்கோவில் சந்திப்பு - மட்கான் சிறப்பு ரயில் (ரயில் எண் 06083) செவ்வாய்க்கிழமைகளில் (டிசம்பர் 23 மற்றும் 30, 2025 மற்றும் ஜனவரி 6, 2026) காலை 11.40 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.50 மணிக்கு மட்கான் சந்திப்பு நிலையத்தை வந்தடையும். 

மட்கான்-நாகர்கோவில் சந்திப்பு சிறப்பு ரயில் (ரயில் எண் 06084) புதன்கிழமைகளில் (டிசம்பர் 24 மற்றும் 31, 2025 மற்றும் ஜனவரி 7, 2026) காலை 10.15 மணிக்கு மட்கான் சந்திப்பிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பை அடைந்துவிடும்.

மங்களூர் சந்திப்பு - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் விவரம்:

மங்களூர் சந்திப்பு - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (06041) ஞாயிற்றுக்கிழமைகளில் (டிசம்பர் 7, 14, 21, மற்றும் 28, 2025, மற்றும் ஜனவரி 4, 11 மற்றும் 18, 2026) மாலை 6 மணிக்கு மங்களூர் சந்திப்பிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு வந்தடையும். 

மறுநாள், திருவனந்தபுரம் வடக்கு - மங்களூர் சந்திப்பு வாராந்திர சிறப்பு ரயில் (06042) திருவனந்தபுரத்தில் இருந்து திங்கள்கிழமைகளில் (டிசம்பர் 8, 15, மற்றும் 22, 2025, மற்றும் ஜனவரி 5, 12 மற்றும் 19, 2026) காலை 8.30 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் இரவு 8.30 மணிக்கு மங்களூர் சந்திப்பை அடைந்துவிடும்.

சார்லப்பள்ளி-கொல்லம் சிறப்பு ரயில் விவரம்:

சார்லப்பள்ளி-கொல்லம் சிறப்பு ரயில் (ரயில் எண் 07119) புதன்கிழமைகளில் (டிசம்பர் 17 மற்றும் 31) காலை 10:30 மணிக்கு சார்லப்பள்ளியில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 10 மணிக்கு கொல்லத்தை அடையும். 

கொல்லம்-சார்லப்பள்ளி சிறப்பு ரயில் (ரயில் எண் 07120) வெள்ளிக்கிழமைகளில் (டிசம்பர் 19, 2025 மற்றும் ஜனவரி 2, 2026) அதிகாலை 2:30 மணிக்கு கொல்லம் சந்திப்பு நிலையத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 1:20 மணிக்கு சார்லப்பள்ளியை அடையும்.

சிறப்பு ரயில் குறித்து தகவல்:

சிறப்பு ரயில் குறித்த கூடுதல் தகவல்களுக்கு, பயணிகள் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.enquiry.indianrail.gov.in ஐப் பார்வையிடலாம், NTES செயலியைப் பயன்படுத்தலாம் அல்லது 139 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க - ரயில்களில் தண்ணீர் பாட்டில் இலவசமா? ரயில்வே கொடுத்த புது அப்டேட்.. நோட் பண்ணுங்க!

மேலும் படிக்க - இனி Non AC பெட்டியிலும் தலையணை, போர்வை! கட்டணம் இதுதான் - ரயில்வே சூப்பர் அறிவிப்பு

மேலும் படிக்க - Indian Railways : இண்டிகோ பிரச்சனை.. சிறப்பு ரயில்கள் அறிவிப்பு - முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News