)
Southern Railways, Five Special Trains For Diwali: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்தும் தென் மாவட்டங்களில் இருந்தும் முன்பதிவு இல்லாத ஐந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தென்னக ரயில்வே அறிவித்துள்ள ஐந்து சிறப்பு ரயில்கள் என்னென்ன?, இயக்கப்படும் தேதிகள் என்ன?, எந்தெந்த ஊர்களில் ரயில்கள் நிற்கும் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இங்கு காணலாம்.
தாம்பரம் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில் நாளை (அக். 17) தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, செங்கோட்டை நோக்கிச் செல்லும். அதையடுத்து, தீபாவளி அன்று செங்கோட்டையில் இருந்து தாம்பரம் நோக்கி புறப்படும். முழுமையாக முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்படுகிறது. 1 ஏசி சேர் கார் பெட்டி, 11 சேர் கார் பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இந்த ரயில்களில் இருக்கும்.
Deepavali Specials on Track!
— Southern Railway (@GMSRailway) October 16, 2025
To manage the festive rush & ensure smooth travel this #Deepavali Southern Railway is operating Special Trains, including Unreserved MEMU Express Specials.#Tambaram – #Sengottai – Tambaram Express Special will run to connect passengers with… pic.twitter.com/cADKjCq5hg
தாம்பரம் - செங்கோட்டை (ரயில் எண் - 06013) நாளை வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு சென்றடையும். செங்கோட்டை - தாம்பரம் (ரயில் எண் - 06014) வரும் திங்கட்கிழமை (அக். 20) இரவு 8.45 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு செவ்வாய்கிழமை காலை 9.45 மணிக்கு சென்றடையும். செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுதூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னையில் இருந்து செல்லும் இந்த ரயில் மயிலாடுதுறை, கும்பகோணம், திருச்சி வழியாக மதுரையை சென்றடையும். சென்னை எழும்பூரில் (ரயில் எண் 06161) இருந்து நாளை வெள்ளிக்கிழமை இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, சனிக்கிழமை காலை 10: 15 மணிக்கு மதுரை சென்றடையும். 12 கார் MEMU பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்படும். இந்த ரயிலும் முழுமையாக முன்பதிவு இன்றி இயக்கப்படுகிறது.
Deepavali Special MEMU Service
— Southern Railway (@GMSRailway) October 16, 2025
To handle festive travel demand, a One-way Unreserved MEMU Express Special will run between #Chennai Egmore and #Madurai on 17th October 2025 (Friday).
Departs Chennai Egmore: 23:45 hrs Arrives Madurai: 10:15 hrs (next day)
Route:… pic.twitter.com/JhFuWTSBAc
சென்னை எழும்பூரில் தொடங்கி, தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, கடலூர் துறைமுகம், பரங்கிபேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், அம்பாத்துரை, கொடை ரோடு, சோழவந்தான் ஆகிய இடங்களில் நின்றுச் செல்லும்.
மதுரையில் இருந்து சென்னைக்கு நேர்வழியில் செல்லும் இந்த ரயில் (ரயில் எண் 06162) வரும் சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, சோழவந்தான், கொடை ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். அன்றிரவு 7.15 மணிக்கு ரயில் தாம்பரத்தை எட்டும். இந்த ரயிலும் முழுமையாக முன்பதிவு இல்லாத 12 கார் MEMU பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.
Deepavali Special Day Service!
— Southern Railway (@GMSRailway) October 16, 2025
To cater to festive travel needs, a One-way Unreserved MEMU Express Special will run between #Madurai and #Tambaram on 18th October 2025 (Saturday).
A convenient daytime journey to help passengers return after Deepavali celebrations! pic.twitter.com/xsgvpKoyRE
வரும் சனிக்கிழமை சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரயில் மயிலாடுதுறை, திருவாரூர், நீடாமங்கலம், தஞ்சாவூர், திருச்சி வழியாக மதுரைக்குச் செல்கிறது. இதுவும் முழுமையாக முன்பதிவு இல்லாத 12 கார் MEMU பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.
Another Festive Special on Track!
— Southern Railway (@GMSRailway) October 16, 2025
A One-way Unreserved MEMU Express Special will operate between #Chennai Egmore and #Madurai to ease #Deepavali rush and ensure smooth festive travel.
Date: 18th October 2025 (Saturday)
Departs Chennai Egmore: 23:45 hrs
Arrives… pic.twitter.com/6XbqKngFpO
சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரயில் (ரயில் எண் 06045) வரும் சனிக்கிழமை இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, கடலூர் துறைமுகம், பரங்கிபேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், மயிலாடுதுறை, பேரளம், திரூவாரூர், நீடாமங்கலம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், அம்பாத்துரை, கொடை ரோடு, சோழவந்தான் ஆகிய இடங்களில் நின்றுச் செல்லும். ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 11.30 மணிக்கு மதுரை வந்தடையும்.
இந்த ரயில் தீபாவளி பண்டிகைக்கு பின் சென்னை திரும்பும் மக்களுக்காக இயக்கப்படுகிறது. தீபாவளிக்கு அடுத்த நாள், அதாவது செவ்வாய்கிழமை அன்று இரவு 8.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் இந்த ரயில் (ரயில் எண் 06046) சோழவந்தான், கொடை ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருதாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நின்றுச் செல்லும். அடுத்த நாள் (புதன்) காலை 4.30 மணிக்கு சென்னை தாம்பரத்தை அடையும். இதுவும் முழுமையாக முன்பதிவு இல்லாத 12 Car MEMU பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.
Deepavali Night Special Service!
— Southern Railway (@GMSRailway) October 16, 2025
A One-way Unreserved MEMU Express Special will run between #Madurai and #Tambaram to help passengers return after the festive celebrations
Date: 21st October 2025 (Tuesday)
Departs Madurai: 20:30 hrs
Arrives Tambaram: 04:30 hrs… pic.twitter.com/VriWQ7sKF8
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ