Food Safety Officer Sathish Kumar About Watermelon : சென்னை சைதாப்பேட்டை உணவு பாதுகாப்பு அலுவலகதில்,சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.
தர்பூசணி விற்பனை பாதிப்பு!
சில நாட்களுக்கு முன்பு,தமிழகத்தில் கோடைக்காலம் ஆரம்பித்ததை ஒட்டி, தர்பூசணி விற்பனை படு ஜோராக களைக்கட்டியது. இந்த நிலையி, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவு சோதனையில் இறங்கினர். அப்போது, அவர்கள் சில கடைகளில் சோதனை செய்து அந்த பழங்களை அகற்றினர். இதனால், அவற்றில் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதால் அவை அகற்றப்பட்டதாக தகவல்கள் பரவியது. இதையடுத்து, மக்களிடையே அச்சம் பரவ தொடங்கியது. தர்பூசணி வாங்குவதையோ, சாப்பிடுவதையோ தவிர்த்தனர். இதனால், விவசாயிகள் பெரும் பாதிப்படைந்தனர்.
சதீஷ்குமார் விளக்கம்:
மக்களிடையே தர்பூசணி குறித்த பயம் தொற்றிக்கொண்டதை அடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியான சதீஷ்குமார் விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து இன்று பத்திரிகையாளர்களை சைதாப்பேட்டையில் சந்தித்த அவர் பேசிய விவரம் பின்வருமாறு:
சென்னை பொறுத்த வரையில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் பல்வேறு சோதனை செய்துள்ளதாகவும்,தமிழகம் உணவு கலப்படம் இல்லாமல் பாதுகாப்பான மண்டலமாக உள்ளது என தெரிவித்தார் மேலும் தர்பூசணி பழம் உடலுக்கு மிகவும் நல்லது எனவும் சென்னையில் எந்த இடத்திலும் தர்பூசணி பழத்தில் செயற்கை நிறங்கள் கலக்கப்பட்டதாக புகார் வரவில்லை என தெரிவித்தார்
பொதுமக்கள் கவலை இன்றி தர்பூசணி பழத்தை தாராளமாக வாங்கி சாப்பிடலாம் எனவும் செயற்கை நிறங்கள் கலக்கப்பட்டதாக புகார் வந்தால் அதனை உணவு பாதுகாப்புத் துறை கவனித்துக் கொள்ளும் என தெரிவித்தார். நமது விவசாயிகள் சிறப்பான முறையில் தர்பூசணி பழங்களை சந்தைக்கு கொண்டு வந்துள்ளனர் எனவும் யாரெல்லாம் கலப்படம் செய்கிறார்களோ அவர்களின் மீது உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.
சென்னையில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டதில் சென்னையில் சில இடங்களில் மட்டும் எலி கடித்த பழம், அழுகிய பழங்களை உள்ளிட்டவைகளை மட்டுமே அப்புறப்படுத்தி இருப்பதாகவும் மேலும் சென்னையில் செயற்கை நிறங்களை கலக்கப்பட்டதாக எந்த பழங்களும் அப்புறப் படுத்தவில்லை என தெரிவித்தார்..
உணவு பாதுகாப்புத் துறை எந்த வகையிலும் விவசாயிகளுக்கு எதிரி இல்லை எனவும் யாரோ ஒரு சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர் என தெரிவித்த அவர், நாங்கள் எந்த பழங்கள் மீதும் தவறு சொல்லவில்லை எந்த விவசாயிகள் மீதும் தவறு சொல்லவில்லை ஒருவேளை, பொதுமக்களுக்கு சந்தேகம் இருப்பின் உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் அனுப்பலாம் எனவும் புகார் உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பொதுமக்கள் பழத்தின் மீது சந்தேகம் இருந்தால் தங்களிடம் உள்ள டிஷ்யூ பேப்பரில் சோதனை செய்யலாம் எனவும் அதில் dark red நிறம் வந்தால் அது கலப்படமானது என தெரிவித்தார். கலப்பட பழமாக இருந்தால் சாப்பிட்ட உடனேயே பொதுமக்களுக்கு வாய் புண், ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் எனவும் அப்படி ஏற்படும் பட்சத்தில் பொதுமக்கள் உடனடியாக மருத்துவரின் அணுக வேண்டும் என தெரிவித்தார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உணவு கலப்பட விவகாரத்தில்,உணவுகள் கலப்படமில்லாமல் மிகவும் பாதுகாப்பு மண்டலமாக உள்ளது எனவும் ஒரு சிலர் மட்டுமே தவறு செய்கிறார்கள் அவர்களையும் விரைவில் களை எடுத்தால் தமிழ்நாடு கலப்பட விவகாரத்தில் பாதுகாப்பானதாக மாறும் என தெரிவித்தார். பெரிய கடை சின்ன கடை என்ற வேறுபாடு உணவு பாதுகாப்பு துறைக்கு கிடையாது எனவும் எந்த கடை மீது புகார் வந்தாலும் உணவு பாதுகாப்பு துறை பொதுமக்களுக்காக அங்கு நிற்கும் கூறினார். இவை அனைத்தையும், அவர் தர்பூசணியை சாப்பிட்டே கூறினார்.
அவருக்கே வாந்தி-மயக்கம்!
சென்னை அண்ணா சாலையில் உள்ள பிலால் ஹோட்டலில் சில நாட்களுக்கு முன்பு பிரியாணி சாப்பிட்டு சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல். இதையடுத்து அந்த ஹோட்டலில் ஆய்வு செய்வதற்காக மாலை 5 மணி அளவில் சதீஷ்குமார் குழுவினருடன் சென்றுள்ளார். செல்லும் வழியில் அவருக்கு தலை சுற்றல் ,மயக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் ஆய்வுக்கு செல்லாமல் பாதியிலேயே திரும்பியதாக கூறப்படுகிறது
மேலும் படிக்க | தர்பூசணி சாப்பிடும் போது ‘இந்த’ தவறை கண்டிப்பா செய்யாதீங்க..!!
மேலும் படிக்க | தர்பூசணி பழங்களில் ரசாயனம் கலப்பு... எளிமையாக கண்டுபிடிக்க வழிகள் - உஷார் மக்களே!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









