தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோவில்பட்டி மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. அந்த அமைப்பின் மாநில தலைவர் கொளத்தூர் ரவி கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து சிறப்புரையாற்றினார். இதில், வணிக உரிமம் பெற்றவர்களை, வணிக நலவாரியத்தில் அரசே உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும். மே 5-ம் தேதி வணிகர் தினத்தை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டுமென தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் கொளத்தூர்.ரவி செய்தியாளர்களிடம் கூறுகையில், “அந்நிய முதலீட்டில் வரக்கூடிய ஆன்லைன் வர்த்தகத்தைத் தான் தடை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகிறோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நான் இருக்கும் அந்நிய ஆன்லைன் வர்த்தகத்துக்கு இடம் தரமாட்டேன் என்றார். அதனால் 20 ஆண்டுகளாக நிம்மதியாக இருந்தோம். ஆனால், தற்போது யார் வேண்டுமென்றாலும் வணிகம் செய்யலாம். ஆனால், தமிழகத்தில் 21 லட்சம் சிறு வணிகர்கள் சின்னபின்னமாகி வருகின்றனர். ஒரு கணக்கெடுப்பின்படி 29 சிறுவணிங்கள் அழிந்து கொண்டுள்ளது. மீதமுள்ள சிறு வணிகங்களை காப்பாற்ற அந்நிய ஆன்லைன் முதலீடு அறவே வரக்கூடாது என்பதை சட்டமாக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி. வரி குறைப்பதற்கு வணிகர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால், ஜி.எஸ்.டி. வரி தொடர்பாக வணிகர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவதை வாடிக்கையாக வைத்துள்ளதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
அமைச்சர்கள், அமைச்சர்களானது 11 சதவீத வளர்ச்சியை எட்டிவிடுவார்கள். அவர்கள், பொதுமக்களையும், வணிகர்களையும் சந்தித்தது இல்லை. வணிக நல வாரியத்தில் உள்ள சலுகைகளை எந்த அரசும் வணிகர்களுக்கு வழங்கியதே கிடையாது. வணிக நல வாரியத்தில் உறுப்பினர்களாவதற்கு பல தடைகள் உள்ளன. அரசுகள் வணிகர்களுக்கு எதுவும் செய்வதில்லை. ஆன்லைன் வர்த்தகம் உள்ளிட்டவைகளுக்கு எதிராக சிறு வணிகர்கள் தொடர்ந்து போராடி நிற்கிறோம். எங்கள் பேரமைப்பு அரசியல், சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டது. வணிகர்களுக்கு அதிகாரிகளால் 100 சதவீதம் நெருக்கடி இருக்கிறது,” என்றார்.
மேலும் படிக்க | ஒருவேளை அதிமுக - தவெக கூட்டணி வைத்தால்... திமுகவிற்கு ஏற்படும் 5 பாதிப்புகள்!
மேலும் படிக்க | கரூர் கூட்ட நெரிசல்: பின்னணியில் சதி இருக்கலாம் - சொல்வது தவெகவின் தாடி பாலாஜி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









