)
திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில் மின் பகிர்மான கோட்ட அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மின் பகிர்மான கோட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார். முன்னதாக அந்த அலுவலகத்தில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் இருந்தது. அதனை மின்வாரிய அதிகாரிகள் அப்புறப்படுத்தி உள்ளனர்.
அவர்கள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அலுவலகத்திற்கு பின்னால் இருந்த குப்பை தொட்டியில் தூக்கி வீசி உள்ளனர். இது சமூக வலைத்தளங்களில் வைரலாக, இதனை பார்த்த அதிமுகவினர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை குப்பை தொட்டியில் வீசி அவமதித்துவிட்டதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக எக்ஸ் பக்கத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
அதில், மறைந்தும் மக்கள் உள்ளங்களில் வாழும் இதயதெய்வம் மாண்புமிகு அம்மா அவர்களை அவமானப் படுத்திய ஸ்டாலின் அரசுக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும் கடும் கண்டனம். மின் பகிர்மான கோட்ட அலுவலகத்தில் உள்ள மாண்புமிகு அம்மா அவர்களின் புகைப்படங்களை குப்பைத் தொட்டியில் வீசினால், மாண்புமிகு அம்மா அவர்களின் சாதனைகளை மறைத்துவிட முடியுமா?
2006-11 திமுக ஆட்சியில் இருண்டிருந்த தமிழ்நாட்டை, ஒளிரூட்டியவர் மாண்புமிகு அம்மா அவர்கள். மின்வெட்டு தமிழ்நாட்டை, மின்மிகை மாநிலமாக்கியவர். ஆட்சிக்கு வந்தது முதல் மின் கட்டண உயர்வை மட்டும் சரியாக செய்யும் இந்த கையாலாகாத ஸ்டாலின் மாடல் திமுக அரசின் அவமானச் செயலுக்கு, தமிழ்நாட்டு மக்களுடன் இணைந்து மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையிலான அஇஅதிமுக தக்க பதிலை 2026-ல் தரும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ