முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி! அவரே சொன்ன முக்கிய தகவல்!

என்கவுண்டர் என்பது மோசமான குற்றவாளிகளை பிடிக்கும் சூழலில் அவர்கள் காவலர்களை தாக்கும் போது பாதுகாப்புக்காக நடைபெறும் போர் சம்பவம் தான். இது போன்ற குற்றவாளிகளால் தாக்கப்பட்டு எத்தனையோ காவலர்கள் உயிரிழந்தார்கள் - சைலேந்திரபாபு பேட்டி.

Written by - RK Spark | Last Updated : Apr 13, 2025, 09:08 AM IST
  • முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி
  • மயிலாடுதுறை பள்ளி விழாவில் கலந்து கொண்டார்.
  • சில முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி! அவரே சொன்ன முக்கிய தகவல்!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சிவனாகரம் கிராமத்தில் உள்ள தனியார் (ஶ்ரீராமகிருஷ்ணா) மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டுவிழா நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கண்டு ரசித்தார். தொடர்ந்து மாணவ மாணவிகளிடையே கலந்துரையாடி பள்ளியில் கல்வி மற்றும் விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, குழந்தைகளை தேசிய அளவிலான தரம் வாய்ந்த கல்லூரிகளான ஐஐடி ஐ.ஐ.எம் ஏ.ஐ.எம.எஸ் போன்ற கல்லூரிகளில் சேர்த்து படிக்க வைப்பதற்கு பெற்றோர்கள் முன் வர வேண்டும்.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | PM Kisan 19வது தவணை இந்த நாளில் வருகிறது: இந்த விவசாயிகளுக்கு கிடைக்காது.... இதுதான் காரணம்

இதற்கான நுழைவுத் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு குழந்தைகளை பெற்றோர் தயார் செய்ய வேண்டும் வீடுகளில் கல்வி கற்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். 700 மணி நேரம்தான் குழந்தைகள் பள்ளியில் இருப்பார்கள் 8000 மணி நேரம் குழந்தைகள் வீட்டில்தான் இருப்பார்கள் என்பதால், வீட்டில் பொழுதுபோக்கு அம்சங்கள், தேவையில்லாத பேச்சுக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டுமென்றால் உலகலாவிய மொழியான ஆங்கிலத்தை நம் குழந்தைகள் கற்றுகொள்ள வேண்டும். ஆனால் இன்றைய சூழலில் 12ஆம் வகுப்பு வரை ஆங்கில கல்வியில் படிக்கும் குழந்தைகள் கூட ஆங்கிலத்தை சரளமாக எழுதவோ படிக்கவோ தெரியாத நிலையில் உள்ளனர். உயர்கல்வியில் கம்யூனிகேஷன் அதிகம் தேவைப்படும், இனிவரும் காலங்களில் கணினி பயன்பாடு ஏ.ஐ தொழில்நுட்பம் பயன்பாடு அதிகமாக இருக்கும்.

அதனை குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டும் குழந்தைகளின் கேட்கும் திறனை அதிகப்படுத்த வேண்டும், அதேபோல் அவர்களது விளையாட்டு திறமையை எவ்வித தடையும் செய்யக்கூடாது விளையாடும் போதுதான் உடல் நலனுன் மன நலனும் வளரும். விளையாட்டு மைதானம் தான் சிறந்த தலைமை பண்புகளையும் மாணவர்களுக்கு கற்றுத் தரும் வீடுகளில் தொலைக்காட்சி பார்ப்பது செல்போன் whatsapp, facebook போன்றவற்றை பார்ப்பதால் அவற்றிற்கு அடிமையாகிவிடுவார்கள். மொபைல் போனில் நிறைய மோசடிகள் நடக்கிறது. இதில் சிக்கி நமது குழந்தைகள் ஏமாந்து விடுவார்கள். எனவே அறிவார்ந்த உலக விஷயங்கள் அறிந்து கொள்வதற்கான நல்ல இடமாக நமது வீடுகள் பள்ளி சூழலில் இருக்க வேண்டும்.

தமிழகத்தில் மிகப்பெரிய குற்றங்களோ சாதி கலவரங்களோ, மதக் கலவரங்களோ அல்லது தொடர் கொலை சம்பவங்களோ நடைபெறவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில குற்ற சம்பவங்கள் நடைபெறலாம். அதனை கொண்டு சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்வது சரியல்ல. அந்த வகையில் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருந்தாலும் குற்றச் செயல்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் நமது நோக்கமாக உள்ளது. என்கவுண்டர் என்பது மோசமான குற்றவாளிகளை பிடிக்கும் சூழலில் அவர்கள் காவலர்களை தாக்கும் போது பாதுகாப்புக்காக நடைபெறும் போர் சம்பவம் தான். இது போன்ற குற்றவாளிகளால் தாக்கப்பட்டு எத்தனையோ காவலர்கள் உயிரிழந்தார்கள்.

பல காவலர்கள் கை கால்களை இழந்து உள்ளார்கள். அப்படிப்பட்ட சூழலில் தற்காப்புக்காக என்கவுண்டர் செய்வது வழக்கம் தான். அதே நேரம் என்கவுண்டர் குற்றச் செயல்களை குறைத்து விடாது. ஆனால் குற்றச்செயல்கள் செய்பவர்களுக்கு ஓர் பயத்தை ஏற்படுத்தும். குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்டு விட்டு தப்பிச் செல்லலாம், பெண்களை ஏமாற்றி நகைகளை திருடிச் செல்லலாம் என நினைத்து வருபவர்களை சுற்றி வளைத்து பிடிக்கும் பொழுது தமிழ்நாட்டில் காவலர்களிடம் பிடிபட்டால் சுட்டுக் கொன்று விடுவார்கள் என்கிற பயம் அவர்களுக்கு வர வேண்டும். அந்த வகையில் தமிழக காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விடும் அளவிற்கு எதுவும் நடைபெறவில்லை. அப்படி ஏதேனும் நடைபெற்றால் நாமும் அதற்கு குரல் கொடுப்போம் என தெரிவித்தார்.

மேலும் படிக்க  | PM Kisan 19வது தவணை இந்த விவசாயிகளுக்கு கிடைக்காது: காரணம் இதுதான்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News