)
Free Coaching, Tamilnadu : தமிழ்நாட்டில் அரசு வேலைகளைப் பெறத் தயாராகி வரும் இளைஞர்களுக்கு உதவும் வகையில், சேலம் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகங்கள் இலவச பயிற்சி வகுப்புகளை அறிவித்துள்ளன. இந்த வகுப்புகள் ஆசிரியர் தகுதித் தேர்வு (Teacher Eligibility Test - TET) மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கான (Cooperative Society) எழுத்துத் தேர்வுகளுக்குத் தயாராக உதவுவதற்காக நடத்தப்படுகின்றன. மாவட்ட ஆட்சியர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெறும் இந்த வகுப்புகளில் விருப்பம் உள்ள இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..
சேலத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கான பயிற்சி வகுப்புகள்
சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்கள் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இந்த இலவசப் பயிற்சி வகுப்பு ஏற்காடு பிரதான சாலை, கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் 21.08.2025 அன்று காலை 10.00 மணிக்குத் தொடங்குகிறது. இப்பயிற்சிக்குச் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த போட்டித் தேர்வுகள் கலந்துகொண்டு பயன் பெறலாம்.
கரூரில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி
கரூரில் ஆசிரியராக வேண்டும் என்ற கனவுடன் உள்ள இளைஞர்களுக்காக, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 10.07.2025 அன்று ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி 12.10.2025 ஆகும்.
இப்பயிற்சி வகுப்புகள் முதல் கட்டமாக, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடத்தப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழிகளில் பாடங்கள் நடத்தப்படவுள்ளன. பயிற்சி வகுப்பின் முடிவில் மாதிரித் தேர்வுகள் (Mock Tests) நடத்தப்படும், மேலும் தேர்வர்களின் திறனை சோதிக்கும் வகையில் நேர்முகத் தேர்வுகள் (Online Tests) நடத்தப்படும்.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தை அணுகி முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, 04324-223555 அல்லது 6383050010 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட டி.என்.பி.எஸ்.சி (TNPSC) குரூப்-1, குரூப்-2, குரூப்-4 மற்றும் டி.ஆர்.பி (TRB) தேர்வுகள் போன்ற பல்வேறு தேர்வுகளுக்குப் பயிற்சி பெற்ற மாணவர்கள் அரசு வேலைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இத்தேர்வுகளுக்குத் தயாராகி வரும் மாணவர்கள் இந்த இலவசப் பயிற்சி வகுப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ