)
Pongal Gift: 2026 பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 மாதங்கள் உள்ளன. இதற்கிடையில், ஒவ்வொரு பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இலவச வேட்டி, சேலை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்குவது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கைத்தறி மற்றும் நெசவாளர் துறை அமைச்சர் காந்தி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
காஞ்சிபுரத்தில் முருகன் கூட்டுறவு சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட விற்பனை நிலையத்தை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களுகக்கு பேட்டி அளித்த அமைச்சர் காந்தி, பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அவர் பேசுகையில், "பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் வேட்டி, சேலை தரமானதாக இருப்பதால் மக்கள் மகிழ்ச்சியுடன் அதனை வாங்கி செல்கின்றனர்.
கூட்டுறவு சங்கங்களில் விற்பனை செய்யப்படும் பட்டு, சேலைகள் மட்டுமே தரமானவே. இந்தாண்டு பட்டு சேலைகளின் விலையும் உயர்ந்துள்ளது. எனவே, 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான வேட்டி, சேலை 2025 நவம்பர் 15ஆம் தேதி முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். எனவே, ரேஷன் அட்டைதாரர்கள் நவம்பர் 15ஆம் தேதி முதல் இலவச வேட்டி, சேலைகளை வாங்கிக் கொள்ளலாம்" என கூறினார்.
இதற்கிடையில், கடந்த மே மாதம் 2026 பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, வேலை திட்டத்திற்கு ரூ.75 கோடி முதற்கட்டமாக தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருந்தது. 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 1,44,10,000 வேட்டி மற்றும் 1,46,10,000 சேலைகள் உற்பத்தி பெய்யப்பட உள்ளதாக தெரிவித்து இருந்தது. இதற்காக 4,600 மெட்ரிக் டன் நூல் கொள்முதல் செய்துள்ளதாகவும் தமிழக அரசு ஏற்கனவே கூறியிருந்தது.
இதற்கிடையில், மற்றொரு அறிவிப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு நேற்று (அக்டோபர் 31) வந்துள்ளது. அதாவது, மாற்றுத்திறனாளிகள், முதிர்ந்தோர்களுக்கு ரேஷன் பொருட்கள் 2025 நவம்பர் 3,4ஆம் தேதிகளில் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தாயுமானவர் திட்டத்தின் கீழ், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இரண்டாவது சனி, ஞாயிற்று கிழமைகளில் மட்டும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால், 2025 அக்டோபர் மாதத்தில் தீபாவளி பண்டிகைக்காக முன்கூட்டியே ரேஷன் பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தற்போது நவம்பர் மாதத்திலும் முன்கூட்டியே வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ