)
Tamil Nadu government : தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மேம்படுத்தப்பட்ட மின்நூலகத்தை தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் தொடங்கி வைத்துள்ளார். தமிழ் இணையக் கல்விக்கழகம் 17.02.2001 அன்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாகத் தமிழ் மின்நூலகம் செயல்படுகிறது. கன்னிமாரா நூலகம், தஞ்சை சரசுவதி மகால் நுலகம், அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம், உ.வே.சா. நூலகம், தமிழ்நாடு ஆவணக்காப்பகம், அரசு அருங்காட்சியகம், தொல்லியல் துறை, அரசு திரைப்படக் கல்லூரி, இந்திய மருத்துவ இயக்ககம் உள்ளிட்ட நிறுவனங்களிலும் தனிநபர் சேகரிப்பிலுமிருந்து பெறப்பட்ட அரிய நூல்கள், இதழ்கள், ஆவணங்கள் போன்றவற்றை மின்னுருவாக்கம் செய்து இம்மின்நூலகம் உருவாக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் மின்னூலகம்
2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மின்பதிப்பாக்கப் பணிகள், 2017 அக்டோபர் 11 அன்று தமிழ் மின்நூலகமாகப் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. தமிழ் மின்நூலகத் தளத்தில் கலை, இலக்கியம், சமயம், வரலாறு, மருத்துவம், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அரிய நூல்கள், பருவ இதழ்கள், ஓலைச்சுவடிகள் ஆகியவை பதிவேற்றப்பட்டுள்ளன. இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள், பருவ வெளியீடுகள், 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிப் பக்கங்கள் மின்னுருவாக்கம் செய்யப்பெற்றுள்ளன. இம்மின்நூலகம் 17 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளைத் தாண்டி செல்கிறது.
மின்னூலகத்தில் உள்ள தகவல்கள்
சங்க காலம் முதல் சமகாலம் வரையிலான நூல்கள், ஆவணங்கள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றைக் கொண்டிருந்த தமிழ் மின்நூலகம் தற்போது தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், உள்ளடக்கங்களில் ஒளிப்படங்கள், ஒலித் தொகுப்புகள், காணொளிகள், நிலவரைபடங்கள், தொல்லியல் தொடர்பான தகவல்கள் ஆகியவையும் புதிதாகப் பதிவேற்றம் செய்யப்பட்டு ஒரு பல்லூடகப் பயன்பாட்டுப் பெட்டகமாக மின்நூலகம் உருமாற்றப்பட்டுள்ளது. தமிழ், பிராமி, வட்டெழுத்து, கிரந்தம் மற்றும் பிற மொழிகளில் உள்ள கல்வெட்டுகள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
மாணவ, மாணவிகளுக்கு குட் நியூஸ்
மாணவர்களும், ஆய்வாளர்களும், தமிழ் ஆர்வலர்களும் எளிதாகவும் விரைவாகவும் பயன்படுத்தும் வகையில், நூல்களும், இதழ்களும், ஆவணங்களும் வகைபிரித்து வைக்கப்பட்டுள்ளன. பயனர்கள் சிரமமின்றிப் பயன்கொள்ள ஏதுவாக எளிமையாகத் தேடக்கூடிய, பயன்பாட்டுக்கு உகந்த வடிவமைப்பை மின்நூலகம் கொண்டுள்ளது. பயனர் விருப்பத்தின் அடிப்படையில் தேடல் வசதி மற்றும் வகைப்படுத்துதல் போன்ற வசதிகள் உள்ளன. பயனாளர்கள் தங்களைப் பதிவு செய்துகொண்டு. தங்களிடம் உள்ள அரிய ஆவணங்களை நேரடியாக மின் நூலகத்தின் வழியாகவே பதிவேற்றும் செய்யும் வசதியும் புதிதாக வழங்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் இலவசம்
மின் நூலகத்தில் உள்ள உள்ளடக்கங்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அரிய நூல்கள், ஆவணங்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு எழுத்தாளர் விவரம் உள்ளிட்ட குறிப்புகளுடன் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. பயனர்கள் எவ்விதக் கட்டணமுமின்றி மின்நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்; நூல்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பதிவிறக்கம் செய்தும் படிக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ