Chennai Latest: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10 மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு பயிற்சி தேர்வு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பணி வாய்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 10 நாட்கள் இலவச பயிற்சி, கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றைவற்றை உணவு மற்றும் தங்குமிடம் உட்பட கட்டணமின்றி கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் வழங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி


நேற்று நடைபெற்ற விழாவில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவன செயல் இயக்குநர் விஜயகுமார், தலைமை செயல் அதிகாரி ஷ்யாம்,  மாற்றுத்திறனாளி இளைஞர்களை தேர்வு செய்த ஆட்டோ மைக்ரோ யு.ஏ.எஸ். நிறுவனத்தின் நிறுவனர் வர்ஷா குக்ரெட்டி அகஸ்டின், மற்றும் ஓய்வு பெற்ற குரூப் கேப்டன் எம்.ஜே.அகஸ்டின் வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ட்ரோன்களின் பாராமரிப்பு மற்றும் செயல்பாடு தொடர்பாகவும், விவசாயம்,  இ-காமர்ஸ், டெலிவரி, கண்காணிப்பு மற்றும் மேப்பிங் உள்ளிட்ட பிரிவுகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.


மேலும் படிக்க | செந்தில் பாலாஜி வழக்கு: முதலமைச்சருக்கே முழு அதிகாரம் - உயர் நீதிமன்றம்


விரைவில் இந்தியா முழுவதும்...


இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய கருடா ஏரோஸ்பேஸ் நிறுவன செயல் இயக்குநர் விஜயகுமார், கருடா ஏரோஸ்போஸ் எப்போதும் புதிய திறமைகளை அடையாளம் கண்டு பயிற்சி அளிப்பதில் முன்னணியில் உள்ளது. சமத்துவ ட்ரோன் பயிற்சி திட்டத்தின் மூலம் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 10 ஆயிரம் நபர்களை திறன்படுத்தும் நோக்கத்துடன் இந்த திட்டத்தை விரைவில் இந்தியா முழுவதும் வெளியிடுவோம் என்றும் தெரிவித்தார். 


கற்றல் அனுபவம்


ஆட்டோ மைக்ரோ யுஏஎஸ் இன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி வர்ஷா குக்ரெட்டி அகஸ்டின்,  ஒவ்வொருவரும் தங்கள் திறனைக் கற்றுக் கொள்வதற்கும் ஆராய்வதற்கும் சம வாய்ப்புகள் இருப்பதை உறுதிசெய்வதற்கு உள்ளடக்கிய கற்றல் சூழலை உருவாக்குவது மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டதோடு, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சியை வழங்குவதன் மூலம், ஒருங்கிணைந்த ட்ரோன் பயிற்சி அகாடமி (IDTA) அவர்களுக்கு ஒரு தனித்துவமான மற்றும் அற்புதமான கற்றல் அனுபவத்தை வழங்குகிறது என்றார்.


மேலும் படிக்க | உதயநிதி அடித்த கிண்டலில் கடுப்பான சர்ச்சை சாமியாரின் ரியாக்ஷன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ