)
Tamil Nadu Government : தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் "தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி" 3 நாட்கள் வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியானது தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் கொடுக்கிறது. சென்னையில், 3 நாட்கள் நடக்கும் இந்த பயிற்சியில் தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி கொடுக்கப்பட உள்ளது. 09.09.2025 முதல் 11.09.2025 தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை தமிழ்நாடு அரசின் பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் பேக்கரி பொருட்களின் கோதுமை வெண்ணெய் பிஸ்கட், தினை பால் பிஸ்கட், தினை ஜீரா குக்கீ, செரிமான குக்கீகள், ராகி நட்ஸ் குக்கீகள், மல்டிமில்லட் குக்கீகள், சோளம் சாக்லேட் பிஸ்கட், கம்பு நெய் பிஸ்கட், கருப்பு கவுனி பாதாம் குக்கீ, தினை ஓமம் பிரவுன் குக்கீ, பிரவுன் ஓமம் பிரவுன் குக்கீ, ராகி, சாமாமில் பிரவுன் குக்கீ ஃபட்ஜி பிரவுனி, கருப்பு கவுனி பிரவுனி, டபுள் சாக்லேட் பிரவுனி ஆகியவை தயாரிக்க பயிற்சி கொடுக்கப்படும்.
மேலும், கோதுமை வெண்ணிலா பஞ்சு, ராகி சாக்லேட் கேக், தினை வாழை கேக், சோளம் கேரட் இலவங்கப்பட்டை கேக், முழு கோதுமை ரொட்டி, ராகி தினை ரொட்டி, மல்டிமில்லட் ரொட்டி, பால் ரொட்டி வகைகள் எப்படி தயாரிப்பது பற்றி இப்பயிற்சியில் விளக்குவார்கள். மேலும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும்.
இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032. தொலைபேசி எண்கள் - 8668102600 / 7010143022. முன்பதிவு அவசியம். அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ