உயர்கல்வி படிக்க Sc/st/obc மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கான மத்திய அரசின் சூப்பர் திட்டம்
Government Coaching Scheme | வறுமை காரணமாக உயர்கல்வி படிக்க முடியாத Sc/st/obc மாணவர்களுக்காக மத்திய அரசு செயல்படுத்தும் சூப்பரான திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Government Coaching Scheme for students | வறுமை காரணமாக உயர்கல்வி படிக்க முடியாத மாணவர்கள் SC (பட்டியலிடப்பட்ட சாதி), ST (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்), OBC (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) (கிரீமி லேயர் அல்லாதோர்), மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர் கல்வியைத் தொடர சம வாய்ப்புகள் வழங்குவதற்காக கோச்சிங் (Coaching) மத்திய அரசால் கொடுக்கப்பட உள்ளது. அதாவது Coaching Schemes For Sc/st/obc (non-creamy Layer) & Minority Students For Universities என்ற பெயரில் கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவர்கள் இளங்கலை, முதுகலை படிப்புகளை பாதியில் கைவிடாமல் இருக்கவும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கும், நெட் போன்ற தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கும் மத்திய அரசு இந்த பயிற்சிகளை வழங்குகிறது. இவர்கள் தனியார் கோச்சிங் சென்டர்களை நாடிச் செல்ல தேவையில்லை.
திட்டத்தின் நோக்கம்
எஸ்சி/எஸ்டி/ஓபிசி (கிரீமி லேயர் அல்லாதவர்) & சிறுபான்மை சமூக மாணவர்களுக்காக இந்த கோச்சிங் வழங்கப்படுகிறது. இளங்கலை மற்றும் / அல்லது முதுகலை படிப்புகளின்போது பல்வேறு பாடங்களில் மாணவர்களின் கல்வித் திறன் மற்றும் மொழியியல் திறனை மேம்படுத்துவதை இந்த திட்டம் முக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறது. கல்வி தொடர்பான புரிதலை அவர்களுக்கு கொடுக்கவும், அதனால் என்னென்ன வேலை வாய்ப்புகளுக்கு செல்லலாம், மத்திய மாநில அரசுகள் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ், டிஎன்பிஎஸ்சி, ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் மற்றும் அதில் வெற்றி பெறுவது எப்படி என்ற ஆலோசனைகளும் இந்த திட்டத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்த திட்டத்துக்கு பல்கலைக்கழங்கள், கல்லூரிகள் விண்ணப்பிக்க வேண்டும். அந்த பல்கலைக்கழகங்களுக்கு மத்திய அரசு சார்பில் நிதியுதவியும் வழங்கப்படும். புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகள், கற்பித்தல்/கற்றல் உதவி பொருள், அச்சுப்பொறியுடன் கூடிய கணினிகள், போட்டோகாப்பியர், ஜெனரேட்டர் அல்லது இன்வெர்ட்டர் ஆகியவை கல்லூரிகளுக்கு வழங்கப்படும். அதிகபட்சம் 7 லட்சம் ரூபாய் கல்லூரிகளுக்கு கொடுக்கப்படும். மேலும், மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் ஆசிரியர் சம்பளம் எல்லாம் கொடுக்கப்படும்.
மாணவர்கள் எப்படி இந்த திட்டத்தில் சேருவது?
மாணவர்கள் கல்லூரி முதல்வரை நேரில் சந்தித்து இந்த திட்டம் குறித்து கேட்க வேண்டும். அவர் விண்ணப்பம் மற்றும் அதனை பூர்த்தி செய்யும் நடைமுறை குறித்து விளக்குவார். ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ், கல்வி சான்றிதழ்கள் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். தகுதியான மாணவர்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டு போட்டித் தேர்வுகள் உள்ளிட்டவைக்கு இலவசமாக பயிற்சி பெறலாம்.
மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு புதிய அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் பீல் பண்ணுவீங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ