Free IAS, IPS Coaching by Tamil Nadu Government : மத்திய அரசு நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணி தேர்வுகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பயன்பெறுகின்றனர். இந்த நிலையில், இந்த ஆண்டு ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி குறித்த அறிவிப்பு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து மாணவ, மாணவிகள் எப்படி விண்ணப்பிப்பது?  என்பது உள்ளிட்ட முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள், 2024ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இந்திய குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வில் அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்படும் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில் மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும் அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, மாதிரி ஆளுமைத் தேர்வுகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இனவாரியாகவும் கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த ஆர்வலர்கள் பயனடையும் வகையிலும் இப்பயிற்சி மையம் கடந்த 58 ஆண்டுகளாக திறம்பட செயல்பட்டு வருகிறது.


அதன் தொடர்ச்சியாக, இப்பயிற்சி மையத்தில் 2024- ஆம் ஆண்டில் முதன்மைத் தேர்வுக்கு பயின்ற 216 தேர்வர்களில், 22 மகளிர் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகள். உட்பட 48 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில், 7 ஆர்வலர்கள் தமிழை விருப்பப் பாடமாக தேர்வு செய்தவர்கள்; இவர்களுக்கு, 2024 ஜூலை 04 -ம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை உண்டு உறைவிடத்துடன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. மேற்குறித்த காலத்திற்கு ஊக்கத் தொகையாக நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தேர்வர் ஒருவருக்கு தலா ரூ.25,000/- வீதம் வழங்கப்பட்டது. தற்போது, இம்மையத்தில் தேர்ச்சி பெற்றுள்ள தேர்வர்களுக்கு இப்பயிற்சி மையத்தின் மூலம் பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற அகில இந்திய குடிமைப் பணி அலுவலர்களாலும், தலைசிறந்த வல்லுநர்களாலும் வருகின்ற 18.12.2024, 19.12.2024 மற்றும் 20.12.2024 ஆகிய 3 நாட்கள் மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. 


மேலும் படிக்க | மாணவர்களுக்கு நல்ல செய்தி வருமா...? கல்வி உதவித்தொகை - ஸ்டாலின் சொன்ன முக்கிய பாயின்ட்!


தேர்ச்சி பெற்றுள்ள தேர்வர்கள், தங்களது மாதிரி ஆளுமைத் தேர்வை மிகச் சிறப்பான முறையில் எதிர்கொள்ள ஏதுவாக அமையும். இப்பயிற்சி மையத்தில் பயிற்சிப் பெற்று தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் தவிர, முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த பிற தேர்வர்களும் இம்மையத்தால் நடத்தப்பட உள்ள மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்கு பெற அனுமதிக்கப்படுவர். இதற்கென கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. அவ்வாறு பங்கு பெற விரும்பும் தேர்வர்கள் தங்களது விருப்பத்தினை www.civilservicecoaching.com என்ற இணைய தளத்தில் 11.12.2024 முதல் பதிவு செய்து கொள்ளலாம். DAF-I & DAF-II விவரங்களை பதிவு செய்து அவற்றை aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு கட்டாயம் வைக்குமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. 


இம்மையத்தில் மாதிரி ஆளுமைத்தேர்வில் பங்கேற்கும் தேர்வர்களுக்கு, டெல்லியில் நடைபெறும் ஆளுமைத் தேர்வுக்குச் சென்றுவர பயணச் செலவுத் தொகையாக ரூ.5,000/- ஆண்டு தோறும் இம்மையத்தால் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தகவல்களை அறிந்து கொள்ள aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 9345766957 என்ற புலன் எண்ணிற்கோ (வாட்ஸ்-அப்) அல்லது 044-24621475 என்ற தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம். மேலும், 16.12.2024 மாலை 5.00 மணிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | கனமழை எச்சரிக்கை! இன்று இந்த மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ