)
தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரி மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்கில், நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த முறை, மாணவர்களின் நவீன கால கற்றல் மற்றும் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சக்திவாய்ந்த மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் கூடிய லேப்டாப்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் அக்டோபர் மாதம் முதல் லேப்டாப்கள் விநியோகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திட்டம், மாணவர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 10 லட்சம் லேப்டாப்கள் மாணவ, மாணவிகளுக்கு விநியோகம் செய்யப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை தொடர்ந்து, மேலும் 10 லட்சம் லேப்டாப்களை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு லேப்டாப்பின் குறைந்தபட்ச விலை சுமார் ரூ.23,000 என நிர்ணயிக்கப்பட்டு, இதன் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான ஒப்பந்தத்தை பெறுவதற்கு மூன்று முன்னணி நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. இந்த ஒப்பந்த பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளன. விரைவில் ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி, டெண்டரில் வெற்றி பெற்ற நிறுவனம் எது என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அதை தொடர்ந்து, லேப்டாப்கள் தயாரிப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, அக்டோபர் மாதம் முதல் மாணவர்களின் கைகளுக்குக் கிடைக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்பு வழங்கப்பட்ட இலவச லேப்டாப்களில், டூவல் கோர் பிராசசர் மற்றும் 2GB ரேம் போன்ற அடிப்படை அம்சங்களே இருந்தன. ஆனால், தற்போது மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், பல மடங்கு சக்திவாய்ந்த அம்சங்களுடன் புதிய லேப்டாப்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் முக்கிய சிறப்பம்சங்கள்:
இந்த திட்டத்தின் மற்றுமொரு முக்கிய அம்சம், விற்பனைக்கு பிந்தைய சேவையாகும். லேப்டாப்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், மாணவர்கள் எளிதாக அதை சரிசெய்து கொள்ளும் வகையில், மாவட்ட வாரியாக பிரத்யேக பராமரிப்பு மையங்கள் அமைக்கப்படும். இதனால், மாணவர்கள் பழுதான லேப்டாப்பை சரிசெய்ய அலைய வேண்டிய அவசியம் இருக்காது. மேலும், லேப்டாப் தொடர்பான குறைகளை தெரிவிக்கவும், பழுதுகளை பதிவு செய்யவும் பிரத்யேக ஆன்லைன் புகார் வசதி உருவாக்கப்படும். இந்த வசதியைப் பயன்படுத்தி, மாணவர்கள் தங்கள் புகாரின் தற்போதைய நிலை என்ன, பழுதான பாகங்கள் எப்போது மாற்றப்படும் போன்ற அனைத்து விவரங்களையும் இருந்த இடத்தில் இருந்தே தெரிந்துகொள்ள முடியும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ