)
சென்னை: எலும்பு மற்றும் மூட்டு தின வாரத்தை முன்னிட்டு சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமிழ்நாடு எலும்பியல் சங்கம் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
மெட்ராஸ் எலும்பியல் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மெட்ராஸ் எழும்பியல் சங்கத்தின் தலைவரும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணருமான கரு.சண்முக கார்த்திகேயன், செயலாளர் மருத்துவர் அரவிந்த், இணைச் செயலாளர் மருத்துவர் விஷ்ணு, செயற்குழு உறுப்பினரும் மருத்துவருமான ஆனந்த் ஸ்ரீனிவாஸ் சவுலி, மருத்துவர் விஜய் நரசிம்ம ரெட்டி உள்ளிட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் முதியோர்கள் எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியும் மருத்துவர்கள் நடத்தினர். நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த மெட்ராஸ் எலும்பியல் சங்கத்தின் தலைவரும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணருமான கரு.சண்முக கார்த்திகேயன். இந்திய எலும்பியல் சங்கம், தமிழ்நாடு எலும்பியல் சங்கம், மெட்ராஸ் எலும்பியல் சங்கம், சார்பில் சென்னை மாநகரில் முதியோர்களுக்கு எலும்பு மற்றும் மூட்டு வலி தொடர்பாக சிறப்பு மருத்துவ முகாம் இந்த மாதம் 4ஆம் தேதி முதல் துவங்கி 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்கான மருத்துவ சிகிச்சைகள் பரிசோதனைகள் உள்ளிட்டவை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் நடைபெறுகிறது
இந்தியா முழுவதும் நடைபெறக்கூடிய இந்த மருத்துவ முகாமில் முதியவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொண்டார், தொடர்ந்து பேசிய மெட்ராஸ் எலும்பியல் சங்கத்தின் செயலாளரும் மருத்துவருமான அரவிந்த் மனிதர்களுக்கு எப்படி உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் முக்கியமோ அதுபோல எலும்புகள் அனைத்தும் முக்கியமாக பார்க்கப்படுகிறது, 50 வயது கடந்துவிட்டால் எலும்பு மற்றும் மூட்டு பகுதிகளில் அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தும், ஆகவே முன்கூட்டியே முதியவர்கள் இந்த மருத்துவ முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
எலும்பு மற்றும் மூட்டு பகுதி ஆரோக்கியத்தை உறுதி செய்ய அனைத்து வகையான பரிசோதனைகளும் மேற்கொள்ள வேண்டும். முதியோர்களுக்கு எலும்பு முறிவுகளை முன் பலவீனத்தை கண்டறிந்து அதற்கு தேவையான சிகிச்சைகளும் வழங்கப்பட உள்ளது.
எனவே இந்த வாரம் முழுவதும் எலும்பியல் மற்றும் மூட்டு சிகிச்சைக்கான வாரம் என்பதால் முதியவர்கள் இந்த மருத்துவ முகாமை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழ்நாடு எலும்பியல் சங்கத்தின் செயலாளர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ