)
TNPSC Group 2 free coaching Tamilnadu Government : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிந்த நிலையில், அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. ஜூலை 15 கடந்த முறை நடைபெற்ற குரூப் 2 தேர்வுகளுக்கான காலிப் பணியிடங்கள் எண்ணிக்கையில் கூடுதலாக 129 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அந்த பணியிடங்களுக்கான கலந்தாய்வு தேதியை அறிவித்திருக்கும் டிஎன்பிஎஸ்சி, தேர்வாணைய அட்டவணையில் குறிப்பிட்டிருந்தபடி இந்தாண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பையும் வெளியிட்டுவிட்டது. இதனைத் தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேர்வர்கள் மீண்டும் தீயாக படிக்கத் தொடங்கிவிட்டனர்.
இந்த சூழலில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. சென்னையில் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு தமிழ்நாடு அரசின் இலவச பயிற்சி நடக்கிறது. ஜூலை 14 ஆம் தேதி முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் தொடங்கிவிட்டன. தேவைப்படும் மாணவ, மாணவிகள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.
மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, " வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், போட்டித் தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
போட்டிதேர்வுகளுக்கு உகந்த வகையில் திறமையான, அனுபவமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பாடக்குறிப்புகள், தினசரி, மாத இதழ்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் ஆகியவை வழங்கப்படுவதுடன் பாடவாரியான துணைத் தேர்வுகள், மாதிரித் தேர்வுகள் ஆகியவையும் நடத்தப்பட்டு வருகின்றன. இப்போது குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலை போட்டித்தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பானது மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 14.07.2025 அன்று முதல் தொடங்கிவிட்டன. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திங்கள் - வெள்ளி வரையிலான அனைத்து வேலைநாட்களிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது.
எனவே, TNPSC குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலை போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இப்பயிற்சி வகுப்பில் நேரடியாக கலந்து கொண்டு பயனடையுமாறு மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.
விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் கீழ்கண்ட முகவரியில் நேரில் அணுகவும்;
மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலக முகவரி :
மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம்,
A-28, முதல் தளம், டான்சி கட்டிடம்,
திரு.வி.க. தொழிற்பேட்டை,
கிண்டி, சென்னை-32.
தொலைபேசி எண்: 044-22500134, 9361566648
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ