Tamil Nadu Weatherman Latest News: தமிழகத்தில் இன்று இரவு விண்கல் மழை பெய்ய வாய்ப்புள்ளது தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில், "டிசம்பர் 14 ஆம் தேதி இரவு முதல் டிசம்பர் 15 ஆம் தேதி காலை வரை சென்னை மற்றும் தமிழ்நாட்டில் ஜெமினிட் விண்கல் மழை பெய்யும்.
விண்கல் மழை
விண்கல் மழைகளின் ராஜா என்று ஜெமினிட் விண்கல் மழை அழைக்கப்படுகிறது. இதனை பல வானிலை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆண்டின் சிறந்த விண்கல் மழையாகக் கருதுகின்றனர். ஜெமினிட் விண்கல் மழை முதன்முதலில் 1800ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் தோன்றத் தொடங்கின. ஆரம்பத்தில், மணிக்கு 10–20 விண்கற்கள் மட்டுமே இருந்ததால், அவை கண்கவர் என்று கருதப்படவில்லை.
இருப்பினும், பல ஆண்டுகளாக, விண்கல் மழை அதிகரித்து வருகிறது. ஜெமினிட் விண்கல் மழை இன்றைய வலிமையான விண்கல் மழைகளில் ஒன்றாக மாறியுள்ளது. முதலிடத்திற்கு ஜெமினிட்களுடன் நெருக்கமாகப் போட்டியிடும் ஒரே மழை ஆகஸ்ட் மாதத்தில் ஏற்படும் பெர்சீட் விண்கல் மழை மட்டுமே. ஜெமினிட் விண்கல மழை ஒரு சிறுகோளிலிருந்து வருகின்றன. இந்த ஜெமினிட் விண்கல் மழை அக்டோபர் 11, 1983 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. சைமன் கிரீன் மற்றும் ஜான் டேவிஸ் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் 1983 டிபி என்று பெயரிடப்பட்டது.
பின்னர் 3200 பேதான் என்று பெயரிடப்பட்டது. 3200 பேதான் மிகவும் அசாதாரண சுற்றுப்பாதையைப் பின்பற்றுகிறது. இது சூரியனுக்கு மிக அருகில் வருகிறது. பின்னர், புதன் கோளுக்கு அருகில் நெருங்கும். பின்னர் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையைத் தாண்டி வெளிப்புறமாக பயணிக்கிறது. டிசம்பர் நடுப்பகுதியில், பூமி இந்த சிறுகோள் விட்டுச் செல்லும் பேதான் பாதை வழியாகச் செல்கிறது. இதன் விளைவாக ஜெமினிட் விண்கல் மழை ஏற்படுகிறது.
விண்கல் மழை எப்போது பெய்யும்?
விண்கல் மழை டிசம்பர் 14ஆம் தேதி இரவு முதல் டிசம்பர் 15ஆம் தேதி அதிகாலை 2.00 மணி வரை பெய்யும். வானம் இருட்டாக இருப்பின் சுமார் 100 விண்கல் மழையை பார்க்க முடியும். சென்னை மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இவற்றை பார்க்க முடியும். இந்த விண்கல் மழையை இருண்ட இடத்தில் இருந்து பார்க்க முடியும். நள்ளிரவு நேரத்தில் மறுநாள் காலை 2 மணியளவில் பார்க்க முடியும். கண்கள் இருளுக்கு முழுமையாக பழகுவதற்கு 20 நிமிடஙகள் ஆகும். அதுவரை பொறுமையாக பார்க்க முடியும். வசதியாக படுத்துக்கொண்டு முழு வானத்தையும் பார்க்கலாம். விண்கற்கள் எங்கும் தோன்றும். தொலைநோக்கி அல்லது பைனாகுலர் எதுவும் தேவையில்லை" என குறிப்பிட்டார்.
விண்கல் மழை எப்படி பெய்யும்?
விண்கல் மழை வானத்தில் சிறுசிறு கோடுகளை போல தெரியும். இதைத் தான் விண்கல் விழும் நிகழ்வாக வானிலை ஆராய்ச்சியாளகள் கூறுகின்றனர். இது குறிப்பிட்ட தூரம் வருவதற்குள் ஏரிந்துவிடும். இதனை பார்ப்பதற்காக நீண்ட கோடுகளை போன்று தெரியும். இதனை நாம் வெறும் கண்களாலே பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தவெக வேட்பாளர் இன்று அறிவிப்பா...? புஸ்ஸி ஆனந்த் சொன்ன முக்கிய தகவல்...!
மேலும் படிக்க: அரசுப் பள்ளியில் வேலை! 10ஆம் வகுப்பு படித்தால் போதும்.. உடனே அப்ளை பண்ணுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









