)
Tamilnadu government : தமிழ்நாடு முதலமைச்சர் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாட்டில் போதிய மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இருப்பினும் பொதுமக்கள் உரிய நேரத்தில் தங்கள் உடல்நலனை கவனிக்க தவறுவதால் அவர்களின் ஆரோக்கியம் பாதிப்படைகிறது. பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கப்பட்டுள்ளது. நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடைபெற உள்ளது.
இம்மருத்துவ முகாமில் சிறப்பு மருத்துவர்கள் உட்பட செவிலியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு மருத்துவ சேவையில் ஈடுபட உள்ளனர். இம்முகாமில் பொதுமக்களுக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு உடல்நலன் குறித்த குறிப்புகள் எழுதி மருத்துவ அட்டை வழங்கப்படும். அதன் மூலம் அவர்கள் தொடர் சிகிச்சைகள் பெற பயனுள்ளதாக அமையும்.
நலம் காக்கும் திட்டத்தில் கிடைக்கும் சான்றிதழ்கள்
இம்முகாமில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ், வருமான சான்றிதழ். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வும் வழங்குதல் மற்றும் தொழிலாளர் நலத்துறை மூலம் அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கிட தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ பரிசோதனைகள்
இந்த முகாம்களில் அடிப்படை மற்றும் உயர்நிலை மருத்துவ பரிசோதனைகளுடன் முழுமையான உடல் ஆரோக்கிய பரிசோதனைகள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், நுரையீரல் மற்றும் சிறுநீரகத்திற்கான ஆய்வக பரிசோதனைகள், இரத்தத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை, உப்பு சர்க்கரை கொழுப்பு அமிலங்கள் குறித்த பரிசோதனைகள், X-ray, அல்ட்ரா சவுண்ட், உடல் பருமன், மனநலம், இரத்த சோகை, கண் பரிசோதனை, கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள். காது, மூக்கு, தொண்டை பரிசோதனைகள், கர்ப்பகால பரிசோதனைகள், நீரழிவு நோயாளிகளுக்கான பாத பரிசோதனை, கல்லீரல் அழற்சி நோய்க்கான பரிசோதனை செய்யப்படும்.
சிறப்பு சிகிச்சைகள்
காசநோய் மற்றும் தொழு நோய்க்கான பரிசோதனைகள், ஆரம்ப கட்ட புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மேலும், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், மகப்பேறியல், குழந்தைகள் நலம், இருதயவியல், நரம்பியல், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை சுவாச மருத்துவம், மனநலம், இயன்முறை மருத்துவம், கதிரியக்கவியல், மண்டலவியல், சர்க்கரை நோய் மருத்துவம் ஆயுஷ் மருத்துவம் ஆகிய 17 துறைகள் சார்ந்த மருத்துவ நிபுணர்களின் மருத்துவ ஆலோசனைகளும் மற்றும் சிகிச்சைகளும் வழங்கப்படும்.
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் பரிசோனை மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு முகாம்களில் பரிசோதிக்கப்படும் ஆய்வக சோதனைகளின் முடிவுகள் அன்றைய தினமே வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்களை பயன்படுத்தி கொண்டு தங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ