காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை தீவிரமாக நடத்தி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நடைபெறும் ராணுவக் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். அவரது வருகையையொட்டி பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கருப்புக் கொடியுடன் எதிராக போராட்டம் நடத்தினர்.


இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரக்கு, மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கருத்துகள் அனைத்தும், #GoBackModi என டிவிட்டரில் பகிரப்பட்டு வருகிறது. தற்போது இந்த ஹேஷ்டேக் உலக அளவில் முதலிடத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.