வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்கும் சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தி தங்கம் கடத்தல் முயற்சிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. அதில் ஏகப்பட்ட நூதன முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். அப்படி தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய  ஒப்பந்த பணியாளர்கள், பயணிகள் வருகை பகுதியை, தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அதில் ஒரு ஒப்பந்த ஊழியர் வைத்திருந்த கிளினிங் மாப் மீது மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரருக்கு சந்தேகம் ஏற்பட்டது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து பாதுகாப்பு படை வீரா, ஒப்பந்த ஊழியரிடம், அந்த மாப்பை கழற்றி காட்டும்படி கூறினார்.அப்படி அந்த ஊழியர் காட்டும்போது, அந்த மாப்பின் கைப்பிடி குழாய்க்குள் இருந்து தங்க பசை அடைத்த 10 பாக்கெட்கள் வெளியே வந்து விழுந்தன. 


இதனைக் கண்டு அதிா்ச்சியடைந்த  பாதுகாப்பு படை வீரா்,அந்த 10 பாக்கெட்களையும் எடுத்து பிரித்து ஆய்வு செய்தாா். அந்த பாக்கெட்டுகளில் மொத்தம் 1.811 கிலோ தங்க பசை இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூபாய் 78 லட்சம் ஆகும்.


தொடர்ந்து அந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா்,அந்த தங்கப்பசையை கைப்பற்றினர். அதோடு அந்த ஒப்பந்த ஊழியர் வைத்திருந்த மாப்பையும் கைப்பற்றி, அந்த ஒப்பந்த ஊழியரையும்தனது உயா் அதிகாரிகளிடம் ஒப்படைத்தாா்.  மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் விசாரணை நடத்திவிட்டு,சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.சுங்க அதிகாரிகள் இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்துகின்றனர்.



விமான நிலைய ஒப்பந்த ஊழியர் வைத்திருந்த கிளினிங் மாப்பிற்குள்,ரூ.78 லட்சம் மதிப்புடைய தங்கம் எப்படி வந்தது என்பது புரியாத புதிராக உள்ளது.வெளிநாட்டிலிருந்து கடத்தி வந்த தங்கத்தை கடத்தல் ஆசாமி,விமானநிலைய ஒப்பந்த ஊழியரிடம் கொடுத்து,அவர் மாப்பிற்குள் மறைத்து வைத்து,வெளியே கொண்டு செல்ல முயன்றிருக்கலாம்  என்று தெரிகிறது.


மேலும் படிக்க | October 1 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள் இதோ: உங்களுக்கு நேரடி தாக்கம் இருக்குமா?


இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் twitter பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. ஆனால் சுங்கத்துறை இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEata