இந்தியாவில் தங்கம் என்பது ஒரு முதலீடு பொருளாகவே பார்க்கப்படுகிறது. அவசர தேவைகளுக்கு எங்கும் கடன் கிடைக்காத பட்சத்தில், நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்கும் பழக்கம் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதனாலயே பலரும் தங்க நகைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் வரலாறு காணாத வகையில் அதிகமாகி கொண்டே வருகிறது. இந்நிலையில் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் தங்க நகை கடன் தொடர்பான விதிகளில் மாற்றங்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக வங்கிகள் சாராத முத்தூட் பைனான்ஸ், மனப்புறம் போன்ற நிறுவனங்கள், நகைக்கடன் வழங்குவதில் சில கொள்கை மாற்றங்கள் வந்தால் மக்களுக்கு இன்னும் குறைந்த வட்டியில் நகைக் கடன்களை வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | பக்தர்களே அலர்ட்! பழனி முருகன் கோயிலில் மேஜர் மாற்றம்.. வெளியான முக்கிய அறிவிப்பு

மாற்றங்கள் வருமா?
நகை கடன் வழங்கும் வங்கிகள் சாராத நிதி நிறுவனங்களுக்கு, வங்கிகளுக்கு கிடைப்பது போல் Priority Sector Lending போன்ற ஆதரவுகள் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக மக்களுக்கு கடன் வழங்கும் செலவுகள் அதிகமாவதால், அதனை மக்களிடமே வாங்க வேண்டிய சூழ்நிலை இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இதற்கு தீர்வாக வங்கிகள் நகை கடன் வழங்கும் போது கிடைக்கும் அதே சலுகைகள், வங்கிகள் சாராத நிதி நிறுவனங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. மேலும் UPI வழியாக gold-linked credit line கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
நகை கடனுக்கான வட்டி குறையுமா?
Priority Sector Lending வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கு கிடைக்கும் போது, நகை கடனுக்கான பணத்தை திரட்டும் செலவு குறையும். இதன் காரணமாக நகைக் கடன்களை குறைந்து வட்டியில் பொதுமக்களுக்கு வழங்க முடியும் என்றும் கூறப்படுகிறது. நகரங்களை விட கிராமப்புறங்களில் தான் நகைகளை வைத்து பணம் வாங்கும் பழக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் கிராமப்புறங்களில் வட்டி குறைந்தால் பொதுமக்களுக்கு இன்னும் அதிக லாபம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. தங்க நகை கடன் என்பது ஒரு பாதுகாப்பான கடனாகும். எனவே இதில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் கடன் வழங்கும் திறன் மேலும் உயரும் என்றும் கூறப்படுகிறது.

ஆர்பிஐ விதிகள்
கடந்த ஆண்டு தங்க நகை கடன் தொடர்பான விதிகளில் ஆர்பிஐ பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இந்த விதிகளில் கூடுதல் மாற்றங்களும் மேற்கொள்ளப்படலாம் என்ற தகவல்களும் வந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு 2 லட்சம் ரூபாய்க்கு கீழ் தங்க நகை கடன் வாங்குபவர்களுக்கு சில சலுகைகளும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் தங்க நகை கடன் தொடர்பான விதிகளில் மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், நகைகளை அடமானம் வைத்துள்ளவர்களும், இனி அடகு வைக்கப் போறவர்களும் இது குறித்தான செய்திகளை தெரிந்து கொள்வது வேண்டியது அவசியம் என்று பலர் தெரிவிக்கின்றனர். பொதுவாக தங்க நகை கடன்கள் அவசர மருத்துவ செலவுகள், கல்வி கட்டணம், விவசாயம் அல்லது நிலம் வாங்குவதற்காக பெரிதும் வாங்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு பட்ஜெட்டில் தங்க நகை கடன் தொடர்பாக மாற்றங்கள் கொண்டு வந்தால் அது ஏழை மக்களுக்கு சாதகமாக இருக்குமா? அல்லது பாதகமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க | தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு! பெண்களுக்கு வட்டியில்லா கடன் - முழு விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









