PM National Internship Scheme 2025 : தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் சார்பாக முன்னணி நிறுவனங்களில் ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் பிரதம மந்திரி தேசிய இன்டர்ன்ஷிப் திட்டத்தில் குறுகிய கால திறன் பயிற்சிக்கு பதிவு செய்யும் முகாம் 11.03.2025 அன்று நாகப்பட்டினம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதனை அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், முன்னணி நிறுவனங்களில், ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் பிரதம மந்திரி தேசிய இன்டர்ன்ஷிப் திட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு இந்திய அளவில் 500 முன்னணி நிறுவனங்களில் 12 மாதம் வேலைவாய்ப்பு பயிற்சி (இன்டர்ன்ஷிப்) வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்கப்படவுள்ளன. இத்திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள HDFC BANK LTD, INDIAN OIL Corporation Limited, Muthoot Finance Limited போன்ற முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கும் பொருட்டு பதிவு செய்துள்ளன. இந்த திட்டத்தில் படித்த வேலை வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பதிவு செய்யும் பொருட்டு 11.03.2025 அன்று மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் Candidate Mobilization Drive காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெறவுள்ளது. எனவே, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கல்விச் சான்றிதழ்கள், ஆதார், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் தொலைபேசியுடன் கலந்து கொண்டு இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இப்பயிற்சிக்கு 21 வயது முதல் 24 வயதுள்ளவர்கள் மட்டுமே மிண்ணப்பிக்கலாம். குடும்ப வருமானம் ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரோ, விண்ணப்பதாரரின் பெற்றோரோ, விண்ணப்பதாரரின் கணவன் அல்லது மனைவியோ மத்திய மற்றும் மாநில அரசின் கீழ் பணிபுரிபவராக இருத்தல் கூடாது. மேலும் முழு நேர பணியாளர்கள் மற்றும் தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகள் NAPS மற்றும் NATS திட்டத்தின் கீழ் தொழிற்பழகுநர் பயிற்சி பெற்றவர்கள், மத்திய மாநில அரசின் கீழ் ஏதாகிலும் ஒரு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருபவர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இயலாது.
10ம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ, பிஇ, பிஏ, பிஎஸ்சி, பிகாம் மற்றும் ஐடிஐ கல்வித் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், இப்பயிற்சி காலத்தில் மாதாத்திர உதவித்தொகையாக ரூ.5000 மற்றும் தற்செயலான செலவுகளுக்கு ஒரு முறை மட்டும் ரூபாய் 6000 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04365 250126 என்ற தொலைபேசி எண்ணிலும், உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் நாகப்பட்டினம் (அரசு தொழிற்பயிற்சி) நிலைய வளாகம்), என்கிற முகவரியில் நேரிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









