சென்னை மக்களுக்கு நற்செய்தி... இனி இங்கெல்லாம் குடிநீர் பிரச்னையே வராது - 13 லட்சம் பேருக்கு பயன்

Chennai Mamallan Reservoir: சென்னையின் குடிநீர் தேவைக்காக 6வது நீர்தேக்கத்தை அமைக்க முதலமைச்சர் ஸ்டாலின்  இன்று அடிக்கல் நாட்டியிருக்கும் நிலையில், இதனால் சென்னையின் எந்தெந்த பகுதிகளில் குடிநீர் பிரச்னையே இருக்காது என்பதை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 19, 2026, 12:53 PM IST
  • சென்னையில் தற்போது 5 நீர்த்தேக்கங்கள் உள்ளன.
  • ஆறாவது புதிதாக இந்த நீர்த்தேக்கத்திற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
  • இதனால் 13 லட்சம் பேர் பயனடைவார்கள் என எதிர்பார்ப்பு
சென்னை மக்களுக்கு நற்செய்தி... இனி இங்கெல்லாம் குடிநீர் பிரச்னையே வராது - 13 லட்சம் பேருக்கு பயன்

Chennai Mamallan Reservoir: சென்னையின் குடிநீர் தேவைக்காக புதிய நீர்தேக்கத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். மாமல்லபுரம் அருகே நெம்மேலி பகுதியில் ரூ.324.6 கோடி மதிப்பில் 'மாமல்லன் நீர்தேக்கம்' அமைக்க முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி உள்ளார்.

Add Zee News as a Preferred Source

Chennai Mamallan Reservoir: திமுக ஆட்சியில் 43 அணைகள் 

அடிக்கல் நாட்டிய நிகழ்வின் மேடையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "காற்றும் நீரும் இந்த பூமியில் இருப்பதால் மனிதர்களும், மற்ற உயிரினங்களும் என அனைவரும் உயிர் வாழ்கிறோம். சென்னையில் வளர்ந்து வரக்கூடிய பகுதிகளுக்காக நம்முடைய அரசு செய்த முக்கியமான பணிகளை வரலாற்றில் இந்த நிகழ்வு நினைவுக் கூறப்படும். நம்முடைய ஆட்சியில் அணைகளை கட்டப்படவில்லை என பொய்யான தகவலை தெரிவிக்கிறார்கள். 

ஆனால், உண்மையிலேயே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தமிழ்நாட்டினுடைய நீர் நிலைகளை காக்க கூடிய வகையில் அதிகமாக பணிகளை செய்துள்ளார். 1967ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் வந்தது முதல் 2011ஆம் ஆண்டு வரை நம்முடைய தமிழ்நாட்டில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளது. அவற்றை பட்டியலிட்டு சொல்லலாம்" என்று கூறி திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகளின் விவரங்களை முதலமைச்சர் ஸ்டாலின் மேடையில் பட்டியலிட்டார்.

Chennai Mamallan Reservoir: 2021 முதல் நடந்த பணிகள்

மேலும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பேசிய அவர், "2021-25 ஆகிய ஐந்து ஆண்டுகளில் 
காவிரி டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகள் 459.11 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுள்ளன. 24,833.66 கி.மீ நீளத்திற்கு இவை சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடை மடை விவசாயிகளும் பயனடைந்தனர். மாநிலம் முழுவதும் புதியதாக 121 தடுப்பணைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 63 அணைகட்டுகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் மிக மிக முக்கியமானது, தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு கால்வாய் திட்டம் ஆகும். கடந்தாண்டு பிப்ரவரி 7ஆம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. வறட்சி பகுதியான திசையன்விளை மற்றும் சாத்தான்குளம் வரை ஐந்தாண்டுகளில் 9.00 டிஎம்சி நீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த  ஐந்து ஆண்டுகளில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் 47 ஆயிரத்து 920 ஏரிகள் மற்றும் 1 லட்சத்து 33 ஆயிரத்து 967 கி.மீ., கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Chennai Mamallan Reservoir: சென்னையின் 6வது நீர்த்தேக்கம்

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களில் கிழக்கு கடற்கரைச் சாலைக்கும் (ECR) பழைய மாமல்லபுரம் சாலைக்கும் (OMR) இடையில் ஒரு உள்ள கோவளம் உபவடிநிலத்தில் இந்த புதிய நீர்த்தேக்கம் அமைய உள்ளது. இது சென்னையின் 6வது நீர்த் தேக்கமாகும்.  342.60  கோடி ரூபாய் மதிப்பீட்டில் இது அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக நாள் ஒன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் குடிநீரை மக்களுக்கு நம்மால் வழங்க முடியும்.

Chennai Mamallan Reservoir: இதனால் என்னென்ன பலன்?

மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளான சோழிங்கநல்லூர், மேடவாக்கம், பள்ளிக்கரணை, சிறுசேரி, கேளம்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம்  ஆகிய பகுதிகளில் வசிக்கும் 13 லட்சம் மக்களுக்கு இதன்மூலம் குடிநீர் வழங்க இயலும். இத்திட்டத்தினால் சுற்று வட்டாரத்தில்  உள்ள திருவிடந்தை, கோகிலமேடு, மாமல்லபுரம், திருப்போரூர், தண்டலம், பையனூர் ஆகிய பகுதிகளில் நன்னீரை தேக்கி கடல் நீர் உட்புகுதலை தடுத்து நிலத்தடி நீரின் மட்டம் மற்றும் அதன் தரம் மேம்படும். இப்பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாய் 15 கிலோமீட்டர் நீளம் 311 ஏக்கர் பரப்பளவில் சீரமைப்பதினால், உவர் நீர் மீன் வளத்தை நம்பி உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும். மேலும் அப்பகுதியில் வசிக்கும் மீனவர்களுக்கு மீன் பிடி உரிமம் வழங்கப்படும்.

Chennai Mamallan Reservoir: மாமல்லன் நீர்த்தேக்கம்

தொண்டை மண்டலத்தில் காஞ்சிபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு பல்லவர்கள் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை சிறப்பாக ஆட்சி புரிந்தனர். மகேந்திரவாடி, உத்திரமேரூர், தென்னேரி, தூசி மாமண்டுர் போன்ற 39 ஏரிகளை பல்லவர்கள் உருவாக்கியுள்ளனர். ஏரி வாரியம் அமைத்து உணவு மற்றும் நீர் பாதுகாப்பை தொண்டை மண்டலத்தில் உறுதி செய்தனர். பல்லவர்களில் 'மாமல்லன்' என போற்றப்படும் முதலாம் நரசிம்மவர்ம பல்லவனால் உருவாக்கிய மாமல்லபுரம் அருகில் இந்த நீர் தேக்கம் அமைய உள்ளதால் 'மாமல்லன் நீர்த்தேக்கம்' என்று பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்பதால் இப்பெயர் சூட்டப்படுகிறது.

மேலும் படிக்க | வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா? இதுதான் கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணாதீங்க

மேலும் படிக்க | சென்னை வாசிகளே அலர்ட்! போக்குவரத்தில் மேஜர் மாற்றம்.. இந்த ரூட்ல போகாதீங்க

மேலும் படிக்க | இனி ரயில்கள் மாற வேண்டியதில்லை... ஆலந்தூரில் வருகிறது பெரிய மாற்றம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News