Kuthambakkam Bus Terminus Latest News Updates: சென்னை நகரிலும், புறநகர் பகுதிகளிலும் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை வழங்கும் வகையிலும் தமிழ்நாடு புதிய பேருந்து நிலையத்தை சென்னை புறநகர் பகுதியில் திறக்க திட்டமிட்டு வருகிறது.
இதையொட்டி, சென்னையின் நான்காவது புறநகர் பேருந்து நிலையமாக, குத்தம்பாக்கத்தில் ஒரு புதிய பிரம்மாண்டமான பேருந்து நிலையம் திறப்பு விழாவுக்குத் தயாராகி வருகிறது. இந்த புதிய பிரம்மாண்ட பேருந்து நிலையம் எங்கே அமைய உள்ளது? இதில் உள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன? உள்ளிட்டவற்றை இங்கு விரிவாக காணலாம்.
Kuthambakkam Bus Terminus: 4வது புறநகர் பேருந்து நிலையம்
சென்னையில் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் ஆகியவற்றை தொடர்ந்து, சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே உள்ள குத்தம்பாக்கத்தில் மிகப் பிரமாண்ட அளவில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. சுமார் 1.5 ஏக்கர் பரப்பளவில், ரூ.425 கோடி மதிப்பீட்டில் இந்த நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
Kuthambakkam Bus Terminus: முழுமையாக ஏசி வசதி
குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் என்னவென்றால், காத்திருப்பு அறைகள் மற்றும் பயணிகள் அமரும் பகுதிகள் ஆகிய பகுதிகள் முழுமையான குளிர்சாதனை வசதியை பெற்றுகிறது. கோடை காலத்திலும் பயணிகள் எவ்வித சிரமமும் இன்றி பேருந்துகளுக்கு காத்திருக்க இது உதவும் என்று தெரிவிக்கப்படுகிறது.
Kuthambakkam Bus Terminus: வேறென்ன வசதிகள் கிடைக்கும்?
மேலும் பயணிகளின் வசதிக்காக தனித்தனி ஓய்வறைகள், தாய்மார்களுக்கான பாலூட்டும் அறைகள், நவீன கழிப்பறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக 24 மணிநேரமும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு மற்றும் முறையான பாதுகாப்புப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கிளாம்பாக்கத்தில் தற்போது உள்ளது போல் பயணிகளின் வசதிக்காக உணவகங்கள், மருந்தகங்கள் மற்றும் சிறிய கடைகளும் குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தின் உள்ளே அமைய இருக்கின்றன.
Kuthambakkam Bus Terminus: யாருக்கு பயன்?
குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவதன் மூலம் குன்றத்தூர், பூந்தமல்லி, மாங்காடு போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் அதிகம் பயனடைவார்கள் என கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக, சென்னையின் மற்ற பகுதிகளுக்கும், புறநகர்ப் பகுதிகளுக்கும் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தடையின்றி பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.
Kuthambakkam Bus Terminus: இன்னும் சில நாள்களில் திறக்கப்படும்
குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து பணிகளும் 100 சதவீதம் நிறைவடைந்து, வர்ணம் பூசும் பணிகளும் நிறைவடைந்துவிட்டத. இன்னும் சில நாட்களில் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த புறநகர் பேருந்து நிலையத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்க உள்ளார். கிளாம்பாக்கத்தைத் தொடர்ந்து சென்னையின் அடுத்த ஒரு முக்கிய இடமாக குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் அமையும் என்பதில் மாற்றுக் கருத்து வர வாய்ப்பில்லை. நவீன வசதிகளுடன் திறக்கப்பதற்கு தயாராக இருக்கும் குத்தம்பாக்கத்தில் அமைய உள்ள இந்த புதிய பேருந்து நிலையம் சென்னை மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது.
மேலும் படிக்க | மெட்ரோ ரயில் நிலையங்கள் மூலம் அதிக வருவாய்... CMRL போட்டுள்ள ஸ்பெஷல் திட்டம் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









