)
Kalaignar Magalir Urimai Thogai, Pudhumai Penn : தமிழ்நாடு அரசு கல்விக்காகவும், பெண்களின் முன்னேற்றத்துக்காகவும் செயல்படுத்தி வரும் திட்டங்களின் மூலம் பலர் பயனடைந்து வந்தாலும், சிலருக்கு இன்னும் எந்தெந்தெந்த திட்டங்களில் எப்படி பயன்பெறலாம்? என்ற தெளிவு இல்லாமல் இருக்கிறது. குறிப்பாக, படித்த பெண்கள், அதுவும் 12 ஆம் வகுப்பு முடித்து கல்லூரி செல்லாத பெண்கள் இப்போது மீண்டும் கல்லூரி சேர்ந்தால் ரூ.2000 மாதம் பெற முடியும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (Kalaignar Magalir Urimai Thogai), புதுமைப் பெண் திட்டம் என இரண்டிலும் 12 ஆம் வகுப்பை முடித்து கல்லூரி செல்லாத பெண்களாக இருப்பின், உடனே கல்லூரியில் சேர்ந்து இந்த இரு திட்டங்களின் பயனாளியாகவும் மாற முடியும். அத்துடன் டிகிரியையும் முடிக்கும் வாய்ப்பை பெறலாம்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு
தமிழ்நாடு அரசின் இந்த இரண்டு திட்டங்களிலும் ஒரு பெண் பயனாளியாக இருக்க முடியும் என்பதை அண்மையில் தமிழ்நாடு அரசு நடத்தி முடித்த கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற மாபெரும் நிகழ்ச்சியின் வழியாகவே பலருக்கும் தெரிந்தது. ஏனென்றால், அந்த நிகழ்ச்சியில் ஒரு பெண்,தன்னுடைய மகனுடன் சேர்ந்து ஒரே கல்லூரியில், ஒரே வகுப்பில் தானும் இப்போது டிகிரி படித்து வருவதாகவும் அதனை சாத்தியப்படுத்தியது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டமும், புதுமைப் பெண் என்ற திட்டமும் தான் என்று கூறினார். இந்த இரு திட்டங்களினாலும் தனக்கு மாதம் ரூ.2000 கிடைப்பதாகவும், தன்னுடைய மகனுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் கிடைப்பதாகவும் பெருமிதமாக கூறினார். மொத்தம் அப்பெண்ணின் குடும்பத்துக்கு மாதம் 3000 ரூபாய் அரசு கொடுக்கிறது என்பதை பலரும் அறிந்து ஆச்சரியப்பட்டார்கள்.
பெண்களுக்கு முக்கிய தகவல்
அதனால், இதில் இருந்து 12 ஆம் வகுப்புடன் படிப்பை முடித்து, கல்லூரி செல்லாத பெண்களுக்கு ஒரு முக்கிய தகவல் கிடைத்திருக்கிறது. ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்களாக இருந்து அரசுப் பள்ளியிலும் படித்தவராக இருந்தால், கல்லூரிகளில் சேர்ந்து தங்களின் டிகிரி படிப்பை தொடரவும். அப்போது அக்கல்லூரியிலேயே புதுமைப் பெண் திட்டத்துக்கு விண்ணப்பிக்கவும். ஏற்கனவே, திருமணமாகி மகளிர் உரிமைத் தொகை பெறுபவராக இருந்தால், உங்களுக்கு புதுமைப் பெண் திட்டத்தில் ஆயிரம் ரூபாயுடன் சேர்ந்து மாதம் 2 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
புதுமைப் பெண் திட்டம் - கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
புதுமைப் பெண் திட்டத்துக்கு பெண்கள் தனியாக எல்லாம் படிக்கும் பெண்கள் விண்ணப்பிக்க முடியாது. படிக்கும் கல்லூரிகள் வழியாகவே விண்ணப்பிக்க முடியும். அதேபோல், தகுதியுள்ள பெண்களாக இருந்து இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்காமல் இருந்தால், உடனே உங்கள் பகுதியில் நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பிக்கவும். தகுதியான விண்ணப்பமாக இருந்தால் விரைவில் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ