மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. பல்வேறு திட்டங்களில் மானியங்களும் விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின் முதுகெலுப்பாக திகழும் விவசாயத்திற்கு இது போன்ற மானியங்கள் கிடைப்பது விவசாயிகளுக்கு பெரும் நிம்மதியாக இருந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழக அரசு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி விவசாயத்தை எளிதாக கையாளும் வகையிலும், உற்பத்தியை பெருக்குவதற்கும் வேளாண் இயந்திரம் வாங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாய கருவிகளை வாங்க 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கெல்லாம் மானியம் கிடைக்கும்?
தமிழக அரசின் இந்த திட்டத்தின் கீழ் அனைத்து வகையான விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 1/2 ஏக்கர் முதல் ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கும், பெண் விவசாயிகளுக்கும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கும் விவசாய இயந்திரங்கள் வாங்க அதன் மொத்த விலையில் இருந்து 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும். எடுத்துக்காட்டாக ஒரு இயந்திரத்தின் விலை ஒரு லட்சம் என்றால் 50,000 மானியமாக வழங்கப்படும். மீதமுள்ள தொகையை மட்டும் விவசாயிகள் செலுத்தினால் போதும். மேலே குறிப்பிட்டுள்ள விவசாயிகளை தவிர மற்ற அனைவருக்கும் வேளாண் இயந்திரங்கள் வாங்க 40 சதவீதம் மானியம் வழங்கப்படும். மேலும் விவசாய இயந்திரங்களுக்கான வாடகை மையம் அமைக்க 80 சதவீத வரை மானியமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த இயந்திரங்களுக்கு அரசின் மானியம் கிடைக்கும்?
விவசாயத்தின் பல்வேறு கட்டங்களில் தேவைப்படும் முக்கியமான இயந்திரங்கள் அனைத்திற்கும் இந்த மானியம் பொருந்தும். டிராக்டர்கள், பவர் டில்லர்கள், நெல் நடவு இயந்திரங்கள், கதிரடிக்கும் இயந்திரங்கள், களையெடுக்கும் கருவிகள், மதிப்புக்கூட்டும் இயந்திரங்கள், கரும்பு சோகை அரைக்கும் கருவிகள், தேங்காய் மட்டை உரிக்கும் இயந்திரம் போன்ற பல்வேறு கருவிகளை இந்த திட்டத்தின் மூலம் மானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம். இந்த மானிய திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், நிலத்தின் சிட்டா மற்றும் பட்டா போன்றவற்றை வைத்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தெரிந்தவர்கள், தங்கள் செல்போனில் தமிழக அரசின் உழவன் செயலி-யை பதிவிறக்கம் செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் வசதி இல்லாதவர்கள் அல்லது விண்ணப்பிக்க தெரியாதவர்கள், தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க | 'மைக் ஆஃப்...' சட்டமன்றத்தில் இருந்து வெளியேறியது ஏன்...? - ஆளுநர் மாளிகை விளக்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









