Tamil Nadu Government, IIT Madras : இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி மெட்ராஸில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டு மாணவர்களிடையே இருக்கும் பெருங்கனவு. சிலருக்கு ஐஐடி மெட்ராஸ் குறித்து தெரிந்திருந்தாலும், பெரும்பான்மையோருக்கு அங்கு எப்படி சேருவது என்பது தெரிவதில்லை. இந்த சூழலில் ஐஐடி மெட்ராஸில் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் கூட சேர்ந்து படிக்கும் ஒரு முக்கியமான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், திருப்பத்தூர் அரசு பள்ளிமாணவர்களுக்கு "அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ்" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைப்பில், உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில், 'அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ்- திட்டத்தலைவர் மற்றும் IIT மெட்ராஸ் சமூக முன்னெடுப்புகள் தலைவர் திருஹரிகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவர் மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த தெளிவான வழிகாட்டலை வழங்கினார். இந்தத் திட்டத்தின் மூலம், மாணவர்கள் JEE தேர்வை எழுதாமலும், IIT மெட்ராஸ் வழங்கும் B.S பட்டப்படிப்பில் சேரும் வாய்ப்பைப் பெறுகின்றனர். 12ம் வகுப்புக்குப் பிறகே அல்லாமல். 11ம் வகுப்பு முடிந்ததும் இத்திட்டத்தில் சேர முடியும். வயது வரம்பும் இல்லை. பதிவுசெய்யும் மாணவர்கள், IIT மெட்ராஸ் வழங்கும் 4 வார ஆன்லைன் பயிற்சியைபூர்த்தி செய்து தேர்வில் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெறுபவர்கள் Data Science மற்றும் Electronic Sytems ஆகிய தொழில்நுட்ப துறைகளில் BS பட்டப்படிப்பை தொடங்கலாம். மற்ற கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும், வேலை பார்க்கும் தபர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் தகவலுக்கு tudyitm.acinds மற்றும் studyitmacines என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
எனவே, தற்போது 12 மற்றும் 11 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் ஐஐடி நடத்தும் 4 வார ஆன்லைன் பயிற்சியில் சேருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஒருவேளை இந்த பயிற்சியில் கலந்து கொண்டு ஐஐடி நடத்தும் தேர்வில் வெற்றி பெற்றால், எளிதாக ஐஐடி மெட்ராஸில் பிஎஸ் படிப்பில் நேரடியாக சேர்ந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | பெண்களுக்கு வந்தாச்சு குட் நியூஸ்: மகளிர் உரிமைத் தொகை தமிழக அரசு அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









