)
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கான முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் கொடுக்கப்பட்ட மகளிர் உரிமைத் திட்டத்துக்கான புதிய விண்ணப்பங்கள் மீதான கள ஆய்வை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. ஒவ்வொரு விண்ணப்பங்கள் மீது அரசு அலுவலர்கள் நேரடியாக கள ஆய்வு செய்ய உள்ளனர். இது தொடர்பாக கள பணியாளர்களை நியமித்து தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - சுற்றறிக்கை
அந்த சுற்றறிக்கையில், வட்டாட்சியர்கள் தங்கள் வட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நியாய விலைக்கடை விற்பனையாளர்களின் பகுதிகளுக்கு ஏற்ப மனுக்களை, கள வாரியாக பிரித்தளித்து ஆய்வு மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலர்கள் நாள்தோறும் குறைந்தது 100 விண்ணப்பங்களை கள ஆய்வு செய்து அதற்கான செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், கள விசாரணை குறித்த அறிக்கையை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் தினசரி மாலை 6.00 மணிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இப்பணியின் மீது தனி கவனம் செலுத்தி முடித்திட வேண்டும், மறுஉத்தரவு வரும்வரை இப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் முகாம்
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 1.50 கோடி பெண்கள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெற்று வருகின்றனர். இதில் கடந்த முறை தகுதியான பெண்கள் பலர் விடுபட்டுபோனார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு ஒரு வாய்ப்பை இப்போது வழங்கியுள்ளது. தகுதியான பெண்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்தது. ஜூலை 15 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இம்முகாமில் இதுவரை 17 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த சூழலில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பித்த மனுகளின் மீதான பரிசீலனையை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் - கள ஆய்வு எப்படி இருக்கும்?
மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு புதிதாக கொடுக்கப்பட்ட மனுக்கள் மீதான கள ஆய்வு என்பது, மனுக்களில் கொடுக்கப்பட்ட தகவல்கள் உண்மையானதா? என ஆய்வு செய்யப்படும். சொந்த வீடு, வாடகை வீடு, மொபைல் எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படும். மேலும், பெண் பயனாளிகளின் பொருளாதார வரம்பு, மகளிர் உரிமைத்தொகை விதிமுறைகள் அனைத்தையும் பூர்த்தி செய்கிறார்களா? என்பது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும். எனவே, மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்த பெண்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் அரசு அலுவலர்கள் செல்ல உள்ளனர். இந்த ஆய்வு முடிந்தபிறகு எப்போது முதல் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பை அரசு வெளியிடும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ