எங்கே? எப்பொழுது? குறை தீர்க்கும் நாள் குறித்து ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Pensioners News In Tamil: தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் இலவச குறை தீர்க்கும் நாள் கூட்டம் குறித்து ஓய்வூதியதாரர்களுக்கு முக்கியச் செய்தி.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 16, 2025, 10:02 AM IST
எங்கே? எப்பொழுது? குறை தீர்க்கும் நாள் குறித்து ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Pensioners Latest Update: தமிழ்நாடு ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது நாளை (மார்ச் 17) மக்கள் குறை தீர்க்கும் நாள் குறித்து முக்கியத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு எந்த மாவட்ட ஓய்வூதியதாரர்களுக்கான பொருந்தும் போன்ற விவரங்களை பார்க்கலாம். 

ஓய்வூதியதாரர்கள் பயன்பெறக்கூடிய வகையில் அவ்வப்போது அகவலைப்படி, நிலுவைத்தொகை, கருணைத்தொகை பற்றிய அறிவிப்புகளும், வாழ்நாள் சான்று சமர்ப்பிப்பது குறித்த தகவல்களும், ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் பற்றிய முக்கிய அறிவிப்புகளும் தகவல்களும் ஒவ்வொரு மாதம் வெளியிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் மார்ச் மாதத்திற்கான ஓய்வூதியதாரர்கள் நலன் சார்ந்து அறிவிப்பு வந்துள்ளது. அதாவது குறிப்பாக ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியதாரர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறக்கூடிய "குறை தீர்ப்புக் கூட்டம்" பற்றிய அறிவிப்புகளும் மற்றும் அஞ்சல் துறை சார்பில் கோட்ட அளவிலான "ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்" பற்றிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மாதமு நடைபெறக்கூடிய குறை தீர்ப்புக் கூட்டத்தின் மூலம் ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை தெரிவிக்கும் வகையில் "ஓய்வூதியர்கள் குறைதீர்ப்புக் கூட்டம்" நடைபெறுவதற்கு முன்பாக, தங்களது குறைகளை மனுவாக தெரிவிப்பதற்கான காலவகாசம் வழங்கப்பட்டு வருகிறது. 

அதாவது குறிப்பிட்ட இந்த தேதிக்குள் ஓய்வூதியதாரர்கள் தங்களது முறையீடுகளை அனுப்பி வைக்க வேண்டியது கட்டாயம். அதன் அடிப்படையில் அந்தந்த ஓய்வூதியதாரர்களின் அளிக்கும் புகார்கள் குறித்து குறைதீர்ப்புக் கூட்டத்தில் நிவர்த்தி செய்ய வழிவகை செய்யப்படும்.

அதன் அடிப்படையில் மார்ச் மாதத்திற்கான ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கான ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் நாளை (மார்ச் 17, ஞாயிற்றுக்கிழமை) காலை 10:30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் மாநில ஓய்வு இயக்குனரால் நடத்தப்பட இருக்கிறது.

ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சார்பில், "ஓய்வூதியம் தொடர்பாக குறைகள் இருந்தால் ஓய்வூதியதாரர்கள் தங்கள் குறைகளை மார்ச் 9 ஆம் தேதிக்கு முன்னரே அனுப்பி வைக்க வேண்டும் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே யாரெல்லாம் தங்கள் குறைகள் குறித்து புகார் தெரிவித்து இருந்தார்களோ, அவர்கள், நாளை நடைபெறும் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்துக்கொண்டு, தங்கள் சந்தேகங்களை கேட்டுக் தெரிந்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க - ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய கணக்கீடு எப்படி செய்யப்படுகிறது? முக்கிய பங்களிக்கும் DR, முழு கணக்கீடு இதோ

மேலும் படிக்க - ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அதிர்ச்சி: இனி பென்ஷன், கிராஜுவிட்டி கிடைக்காது.... விதிகளில் மாற்றம்

மேலும் படிக்க - ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம், 20%-100% பென்ஷன் உயர்வு: அரசு உத்தரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News