Tamil Nadu Govt : தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களில் வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்தி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிதி உயர்வு மாற்றுத்திறனாளிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. அதன் முக்கிய சாரம்சங்களை இங்கே பார்க்கலாம்.
1. முக்கிய நலத்திட்டங்களில் அதிரடி உயர்வு
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பிரதான உதவித்தொகைகள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. 2025-2026 நிதியாண்டு முதல் இந்த உயர்வு அமலுக்கு வருகிறது. சிகிச்சைக்கான நிதியுதவி முன்பு ரூ. 15,000/ வழங்கப்பட்ட நிலையில் இனி ரூ. 25,000/- கொடுக்கப்படும். சமச்சீர் சத்துணவு நிதியுதவி ரூ. 2,000/- கொடுக்கப்பட்ட நிலையில், 5,000/- உயர்த்தி வழங்கப்படுகிறது. இதன்மூலம், வாரிய உறுப்பினர்களுக்குக் குறைந்தபட்சம் ₹17,000/- முதல் அதிகபட்சம் ₹30,000/- வரை உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
2. நிதியொதுக்கீடு விவரம்:
மாற்றுத்திறனாளிகள் நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைத் தமிழக அரசுப் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதுவரை ஆண்டொன்றுக்கு ₹5,29,62,000/- (சுமார் 5.3 கோடி ரூபாய்) நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரே ஆண்டில் ஒதுக்கப்படும் நிதியானது ₹3,25,00,000/- (மூன்று கோடியே இருபத்தைந்து லட்சம் ரூபாய்) எனத் திருத்தப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 2500 பயனாளிகள் ஆண்டுதோறும் பயன்பெறுவார்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3. ஓய்வூதியதாரர்களுக்கு மற்றொரு முக்கியச் சலுகை
மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS Pension) பயனடையும் உறுப்பினர்களுக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாரியத்தில் உறுப்பினராகி மூன்று ஆண்டுகள் பூர்த்தி செய்த ஓய்வூதியதாரர்களுக்கு, குடும்ப ஓய்வூதியம் (Family Pension) பெறும் காலத்திற்கு முன்னர் வழங்கப்பட்ட ₹15,000/- நிதியுதவி இனிமேல் ₹17,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ₹2,000/- ஆக வழங்கப்பட்ட ஈமச்சடங்கு நிதியுதவி ₹3,000/- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2024-2025 நிதியாண்டு வரை: 2022-2023 மற்றும் 2023-2024 நிதியாண்டு வரை வாரியத்தில் உறுப்பினராக இருந்து மூன்று ஆண்டுகள் பூர்த்தியாகாத பயனாளிகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட அதே ₹15,000/- மற்றும் ₹2,000/- (மொத்தம் ₹17,000/-) நிதியுதவி தொடரும்.
4. மாற்றுத்திறனாளிகள் நல வாரியம்
மாற்றுத்திறனாளிகள் நல வாரியம், 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நாள் முதல், வாரிய உறுப்பினர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், அவர்களது குடும்பம் பாதிக்கப்படும்போது பல உதவிகளை வழங்கி வருகிறது. மேலும், 2018-2019 நிதியாண்டு முதல் "பிரதம மந்திரி விகாசித் பாரத் ரோஜ்கார் யோஜனா" திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான பணிகளைச் சிறப்பாகச் செய்து, 52 நலத் திட்டங்களைச் சீராகச் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









