அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு பெரிய நிம்மதி... அமைச்சர் சொன்ன விஷயம் என்ன?

TN Government Transport Employees: அரசு போக்குவரத்து கழகம் தனியார்மயமாக உள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 12, 2025, 05:10 PM IST
  • 487 பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளது - அமைச்சர் சிவசங்கர்
  • 1000 பேருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுகிறது - அமைச்சர் சிவசங்கர்
  • கூடுதலாக ஆண்டுதோறும் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது - அமைச்சர் சிவசங்கர்
அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு பெரிய நிம்மதி... அமைச்சர் சொன்ன விஷயம் என்ன?

Tamil Nadu Government Transport Employees: கோவை, சுங்கம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இன்று (ஏப். 12) 13 புதிய அரசு பஸ்கள் இயக்கம் தொடக்க விழா மற்றும் 41 போக்குவரத்து கழக ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கி, புதிய பேருந்துகளை தொடங்கி வைத்தார்.

Add Zee News as a Preferred Source

TN Government Transport Employees: பண்டிகைகளிலும் உழைக்கும் ஊழியர்கள்

முன்னதாக விழாவில் பேசிய அமைச்சர் சிவசங்கர்,"தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. போக்குவரத்து கழக ஊழியர்கள் பொதுமக்கள் பேருந்தில் சந்தோஷமாக பயணம் செய்ய கடுமையாக உழைத்து வருகிறார்கள். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் கூட அவர்கள் கொண்டாட்டத்தை மறந்து பொதுமக்களுக்காக உழைத்து வருகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் அரசு பேருந்து மூலம், பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் போக்குவரத்து கழக ஊழியர்களின் உழைப்பால் 19 விருதுகளை போக்குவரத்து கழகம் பெற்று உள்ளது. இதற்கு இடையே போக்குவரத்து துறையை தனியார் மயமாக்குவார்கள் என்று சிலர் வதந்தியையும் பரப்புகிறார்கள்.

மேலும் படிக்க | திமுகவுடன் மறைமுக கூட்டணி.. பழைய பங்காளி அதிமுகவுடன் பகிரங்க கூட்டணி - தவெக விஜய் விமர்சனம்

TN Government Transport Employees: கூடுதலாக 1000 கோடி ரூபாய் நிதி

அவ்வாறு ஒரு நாளும் நடைபெறாது, அரசு போக்குவரத்து கழகத்திற்கு 487 பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளது. 2000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. 1000 பேருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விடியல் திட்டத்திற்கும், மாணவ - மாணவிகளின் இலவச வாழ்த்துக்கள் போதிய நிதிகளை ஒதுக்கி சிறப்பாக செய்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ஆயிரம் கோடி ரூபாய் போக்குவரத்து துறைக்கு ஒதுக்கப்படுகிறது. இதற்கு முன்பு பழைய பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இப்போது 11000 புதிய பேருந்துகள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன.

TN Government Transport Employees: தனியார்மயம் ஆகாது

இதனால் நலிவடைந்த நிலையில் இருந்த அரசு போக்குவரத்து கழகம் இன்று புத்துயிர் பற்றி வருகிறது. எனவே தனியார்மயம் என்ற தகவல் தவறானது. இப்போது அரசு போக்குவரத்து கழகத்தில் பெண்களும் நடத்துனர்களாக பணியில் செயல்பட்டு வருகிறார்கள். இதற்காக அவர்களுக்கு உயரம் பிரச்சனை என்ற காரணம் உருவானபோது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு 10 சென்டி மீட்டர் உயரத்தை குறைத்து அவர்களும் பணியில் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கினார். எனவே தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் பொதுத்துறை நிறுவனமாகவே தொடர்ந்து செயல்படும்" என பேசினார். 

விழாவில், போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் செல்வம், மாவட்ட ஆட்சியர் பவன் குமார், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், திமுக மாவட்ட  செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, ஏர்போர்ட் ராஜேந்திரன், எல்பிஎப் மண்டல தலைவர் பெரியசாமி, பொருளாளர் கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன்: அமைச்சர் பொன்முடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News