)
Government College admission : சென்னை அம்பத்தூரில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், வேலை வாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்ட மேற்படிப்பு மற்றும் முதுநிலைப்பட்டயபடிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநர் அறிவித்துள்ளார். சென்னை அம்பத்தூரில் உள்ள தமிழ்நாடு தொழிகாளர் கல்வி நிலையத்தில் 2025-2026ம் ஆண்டிற்கான பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட படிப்பு, எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட மேற்படிப்பு மற்றும் பிஜி.டி.எல்.ஏ (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப்படிப்பு) தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் (வார இறுதி) பட்டய படிப்புகளும் நடத்தப்பட்டுவருகின்றன.
பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்புகள் சென்னை பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பிஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் (ஏ.எல்.) படிப்புகள் தமிழக அரரின் அங்கீகாரத்துடன் நடைபெற்று வருகின்றது. பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை, எம்.ர (தொழிலாளர் மேலாண்மை). பிஜி.டி.எல்.கு. மற்றும் டி.எல்.எல் (ஏ.எல்.) ஆகியபட்ட / பட்டமேற்படிப்பு / பட்டய படிப்புகள் தொழிலாளர் நல அலுவலர் பதவிக்கு பிரத்யேக கல்வித் தகுதியாக தமிழ்நாடு தொழிற்சாலைகள் தொழிலாளர் நல அலுவலர் விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது.
இக்கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு மேலாளராக பணிபுரிந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
+2 முடித்த விருப்பமுள்ள மாணவர்கள் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), இளநிலை பட்டம் பெற்ற மாணவர்கள் எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) முதுநிலை பட்ட மற்றும் பட்டய படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் மதிப்பெண் அடிப்படையில் அரசு விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தங்கும் விடுதி வசதி இனநிலை மற்றும் முதுநிலை பயிலும் ஆண் மாணவர்களுக்கு மட்டும்.
விண்ணப்பங்கள் 21.04.2028 அன்று முதல் வழங்கப்பட உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அந்து சேர வேண்டிய கடைசி நாள் - 18.05.2025
விண்ணப்பகட்டணம் - 200/, For SC/ST -100/- (சாதிச் சான்றிதழ் நகல் தாக்கல் செய்ய வேண்டும்). விண்ணப்பங்களை தபாலில் பெற விண்ணப்ப கட்டணத்திற்கான ரூ.200, (SC/ST ரூ. 100/-) மற்றும் தபால் கட்டணம் ரூ.50/-க்கான வங்கி வரைவோலையினை "The Director, Taminadu Institute of Labour Studies, Chennai" என்ற பெயரில் எடுத்து பதிவுத்தபால் / விரைவுஅஞ்சல் / கொரியர் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மதிப்பெண் மற்றும் அரசு விதிகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு - ஒருங்கிணைப்பாளர்கள் (சேர்க்கை), முனைவர் இராரமேஷ்குமார், இணைபேராசிரியர் / HOF Mobile No. 9884159410, முனைவர் ச. கார்த்திகேயன் (உதவி பேராசிரியர்) -Mobile No. 9965899822, தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், மின்வாரியசாலை, மங்களபுரம் (அரசு ஐ.டி.ஐ பின்புறம்) அம்பத்தூர், சென்னை 600 098, தொலைபேசி எண் 044 - 29567885 / 29567886 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ