நாகை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. 6 முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்

Nagapattinam District News: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாகை மாவட்டத்திற்கான 6 புதிய அறிவிப்புகளை அறிவித்தார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 3, 2025, 01:46 PM IST
நாகை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. 6 முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்

Tamil Nadu Latest News: நாகை மாவட்டத்திற்கு சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாகை மாவட்டத்தில் ரூ.82.9 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினார். மேலும் நாகை மாவட்டத்திற்கான ஆறு முக்கிய அறிவிப்புகளை வெயிட்டார். நாகை மாவட்டத்திற்கான 6 புதிய அறிவிப்புகள் என்னென்ன என்ற முழு விவரங்களை பார்ப்போம். 

Add Zee News as a Preferred Source

நாகை மாவட்டத்திற்கான முதல் அறிவிப்பு

முதல் அறிவிப்பு வேதாரணியம் மற்றும் தலைஞாயிறு பகுதிகளில் இருக்கிற இளைஞர்களுக்கு குறிப்பாக, பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய வகையில், தெனடார் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் 250 கோடி ரூபாய் செலவில் புதிய சிப்கார்ட் தொழிற்பேட்டை அமைக்கப்படும். காவேரி டெல்டா பகுதியில் அனுமதிக்கத்தக்க தகுந்த வேலைவாய்ப்புகள் அளிக்கக்கூடிய தொழிற்சாலைகள் தொடங்கப்படும். 

நாகை மாவட்டத்திற்கான 2வது அறிவிப்பு

இரண்டாவது அறிவிப்பாக விழுந்தமாவடி, வானவன் மகாதேவி மற்றும் காமேஸ்வரம் ஆகிய மீனவ கிராமங்களில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும். 

நாகை மாவட்டத்திற்கான 3வது அறிவிப்பு

மூன்றாவது அறிவிப்பாக தெற்கு பொய்கைநல்லூரிலும், கோடியக்கரையிலும் தலா 8 கோடி 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மூன்று தளங்கள் கொண்ட பல்நோக்கு பேரிடர் மையங்கள் கட்டப்படும். 

நாகை மாவட்டத்திற்கான 4வது அறிவிப்பு

நாளாவது அறிவிப்பாக 150 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த நாகப்பட்டினம் நகராட்சி கட்டிடம் 4 கோடி ரூபாய் செலவில் புதுமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.

நாகை மாவட்டத்திற்கான 5வது அறிவிப்பு

ஐந்தாவது அறிவிப்பாக நாகப்பட்டினம், கீழ்வேளூர் மற்றும் வேதாரணியம் வட்டங்களில் இருக்கக்கூடிய பல்வேறு வடிகால்கள் மற்றும் வாய்க்கால்களுடைய மதகுகளும், இயக்கு அணைகளும் 32 கோடி ரூபாய் செலவில மறு சீரமைப்பிக்கப்படும். 

நாகை மாவட்டத்திற்கான 6வது அறிவிப்பு

ஆறாவது அறிவிப்பாக உலகம் முழுவதும் இருந்து வரக்கூடிய இஸ்லாமியர்கள் மட்டுமில்லாமல் பல மதங்களைச் சார்ந்த மக்களை வருகை தரக்கூடிய நாகூர் தர்கா, இந்த நாகை மாவட்டத்தில் தான் இருக்கு. இங்கிருந்து இஸ்லாமிய மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு செய்தியை ஆறாவது அறிவிப்பா வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளக்கூடிய இஸ்லாமியர்களுக்காக சென்னை மாநகரம் அருகாமையில் நங்கநல்லூரில் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும். 

 

மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு

மீனவர்கள் நிறைந்த நாகை மாவட்டத்தோட மிகப்பெரிய பிரச்சனை எதுவென்றால், இலங்கை கடற்படையால் நம்முடைய மீனவர்கள் கைது செய்யப்படுவது. கடந்த 22 ஆம் நாள் ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 32 மீனவர்களையும், அவங்களோட ஐந்து மீன்பிடிக்கும் படகுகளையும் இலங்கை கடற்படை கைது செய்தார்கள். உடனடியாக இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு நான் கடிதம் எழுதி எழுதியிருக்கிறேன். 

இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது என கடந்த மாதம் 18 ஆம் நாள் மீனவர் சங்கங்களை சார்ந்தவர்கள் என்னை வந்து கோட்டையில் சந்தித்து பேசி இதைப்பற்றி எடுத்து கூறினார்கள். அவர்கள் வேதனையோடு குறிப்பிட்டது என்னவென்றால், மீனவர்களை கைது செய்கிறார்கள். கடற்படை கப்பலை மீனவர்கள் படகு மீது மோதவிட்டு மூழ்கடிக்கிறார்கள், எங்களது வலைகளை நாசப்படுத்துகிறார்கள் மற்றும் பிடித்து வைத்திருக்கும் மீன்களை திருடி செல்கிறார்கள் என தங்களுடைய மனக்குமுறலை வெளிப்படுத்தினார்கள் என நாகை மக்கள் மத்தியில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். 

மேலும் படிக்க - LIVE: 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடக்கம், அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா! இன்றைய முக்கிய செய்திகள்..

மேலும் படிக்க - 11 & 12ஆம் வகுப்பு பாெதுத்தேர்வு: மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு! விதிமுறைகள் என்னென்ன?

மேலும் படிக்க - தமிழக பட்ஜெட்டில் முதல்முறையாக... முதல்வரின் மெகா திட்டம் - என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News