ரேஷன் கடைகளில் அதிரடி மாற்றம்! ரேஷன் கார்டுதார்களுக்கு தமிழக அரசு புதிய வசதி..

Ration Card News In Tamil: தமிழக ரேஷன் கடைகளில் புதிய வசதி. ரேஷன் கார்டு வைத்திருக்கும் வயது முதிர்ந்தோர், உடல் நலம் பாதிக்கப்பட்டோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 8, 2025, 09:26 AM IST
ரேஷன் கடைகளில் அதிரடி மாற்றம்! ரேஷன் கார்டுதார்களுக்கு தமிழக அரசு புதிய வசதி..

New Facility For Ration Card Holders: ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கும் பொது மக்களின் வசதிக்காகவும் அவ்வப்போது பல அதிரடி மாற்றங்களை ஒன்றன்பின் ஒன்றாக தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் தற்பொழுது ஒரு புதிய உத்தரவு கூட்டுறவு சங்கத்தால் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதுக்குறித்து பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

தமிழக கூட்டுறவு சங்கத்தால் கொண்டுவரப்பட்டு உள்ள புதிய நடவடிக்கை குடும்ப அட்டைதாரர்களுக்கு மிகவும் பயனாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதாவது ஒரு புதிய வெப்சைட் துவக்கப்பட்டு உள்ளது. 

தமிழகத்தை பொறுத்த வரை தற்போது இருக்கும் நடைமுறைப்படி, வயது முதிர்ந்தோர், உடல் நலம் பாதிக்கப்பட்டோர் ரேஷன் கடைக்கு செல்ல சிரமப்படுவதால் தங்களின் சார்பில் வேறு ஒரு நபரை ரேஷன் கடைக்கு அனுப்பி பொருட்களை வாங்கிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். 

இதற்காக உணவு வழங்கல் துறை (Department of Civil Supplies and Consumer Protection) அலுவலகங்களில் அங்கீகார சான்று விண்ணப்பம் பெற்று, அதை பூர்த்தி செய்து தர வேண்டும் என்பது அடிப்படையான விதிமுறை ஆகும். ஆனால் இதற்கு ஒப்புதல் அளிப்பதில் அதிகாரிகள் தாமதம் செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. 

இந்தநிலையில், www.tnpds.gov.in என்ற வெப்சைட்டில் விண்ணப்பிக்கும் வசதியை, உணவு துறை புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கிறது.

தங்களின் சார்பில் வேறு ஒரு நபரை ரேஷன் கடைக்கு அனுப்பும் ரேஷன் அட்டைதாரர், இந்த வெப்சைட்டிற்கு சென்று, "தங்களின் சார்பில் அனுப்பும் நபரின் பெயர், உறவு முறை உள்ளிட்ட விபரங்களுடன், ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்து, விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு அதிகாரிகள் அதை சரிபார்த்து ஒப்புதல் அளிப்பார்கள். 

அதுமட்டுமில்லாமல், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவு தானிய பொருட்களின் எடை குறைவாக இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. எனவே இதனை தடுக்கும் பொருட்டு மின்னணு எடை தராசை வைபை, ப்ளூடூத் மூலமாக பி.ஓ.எஸ். எனப்படும் விற்பனை முனைய கருவிகளுடன் இணைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 

அதனால் ஊழியர்கள் தராசில் எவ்வளவு பொருட்களை வைக்கிறாரோ, அந்த எடை தான் கருவியில் பதிவு செய்யப்படும். எனவே மின்னணு எடை தராசுடன் பி.ஓ.எஸ். கருவிகளை இணைக்கும் பணிகளுக்கு காலக்கெடு நிர்ணியத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்த அசத்தலான மாற்றங்கள் நடைமுறை அமலுக்கு வந்தால், ரேஷன் வாங்கும் பொதுமக்களுக்கு ஒரு பெரிய தீர்வு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் படிக்க - ரேஷன் கார்டில் பிரச்னை இருக்கா... இலவசமாக சிக்கலை தீர்க்கலாம் - இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க!

மேலும் படிக்க - ரேஷன் பொருட்கள் எடை சரியாக இருக்கிறதா? அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு

மேலும் படிக்க - இத கண்டிப்பா செய்யுங்க.. இல்லைனா ரேஷன் அட்டை கேன்சலாகிடும்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News