திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ்..! ரூ.50 லட்சம் பெறலாம்

Tamil Nadu Government : திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆடு, மாடு, கோழி பண்ணை அமைக்க அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை கடனுதவி பெறலாம்.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Apr 11, 2025, 08:48 AM IST
  • திருப்பூர், திண்டுக்கல் மக்களுக்கு குட் நியூஸ்
  • கால்நடை பண்ணை அமைக்க அரசு கடனுதவி
  • மிகப்பெரிய எதிர்காலம் உள்ள தொழில்
திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ்..! ரூ.50 லட்சம் பெறலாம்

Tamil Nadu Government News : கோழிப்பண்ணைகள், செம்மறியாடு மற்றும் வெள்ளாட்டு பண்ணைகள், பன்றிப்பண்ணைகள் அமைத்திட மானியம் பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர். திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கால்நடைகளின் எண்ணிக்கையினை உயர்த்திடவும், தொழில் முனைவோர்களை உருவாக்கிடவும், அரசு நிதியுதவி வழங்கி தொழில்முனைவோர்களை ஊக்குவித்து வருகிறது. அதன்படி, புதிய கோழிப்பண்ணைகள், செம்மறியாடு மற்றும் வெள்ளாட்டு பண்ணைகள், பன்றிப் பண்ணைகளை உருவாக்குவதன் மூலம் மாவட்டம் மற்றும் மாநிலத்தின் இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியை அதிகரிப்பதுடன், புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.

Add Zee News as a Preferred Source

இத்திட்டத்தின் கீழ் நாட்டுக்கோழிப்பண்ணையுடன் குஞ்சு பொறிப்பகம் அமைக்க ரூ.25.00 லட்சம் வரையும், செம்மறி / வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ.10.00 லட்சம் முதல் ரூ.50.00 லட்சம் வரையும், பன்றி வளர்ப்புப் பண்ணை அமைக்க ரூ.15.00 லட்சம் முதல் ரூ.30.00 லட்சம் வரையும், வைக்கோல், ஊறுகாய்ப்புல், மொத்த கலப்பு உணவு(TMR) மற்றும் தீவன சேமிப்பு வசதிகள் பண்ணையம் அமைத்திட தொழில் முனைவோருக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தில் தனிநபர், சுயஉதவிக் குழுக்கள், விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு, விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்புச் சங்கங்கள் பிரிவு-8 நிறுவனங்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் https://nlm.udyamimitra.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டம் தொடர்பான முழுமையான தகவல்களையும், விண்ணப்பிக்கத் தேவையான விரிவான திட்ட அறிக்கையினையும், விண்ணப்பதாரர்கள் http://www.tnlda.tn.gov.in/ என்ற இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள மென்பொருள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், விவரங்கள் அறிய அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள், மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு கால்நடை மேம்பாட்டு முகமை, சென்னை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். 

கவனத்தில் கொள்ள வேண்டியவை

மத்திய மாநில அரசுகள் கால்நடைப் பண்ணை பெருக்கத்தில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. காரணம், பால் சார்ந்த பொருட்கள் மற்றும் இறைச்சிக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவிலும் மிகப்பெரிய டிமாண்ட் இருக்கிறது. இதன் சந்தை மதிப்பு பல்லாயிரம் கோடிகளாக இருக்கின்றன. இதனை கருத்தில் கொண்டும் இந்தியாவில் இருக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை பால் சார்ந்த பொருட்களின் தேவை மற்றும் இறைச்சி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. அதனால் தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளவும்.

மேலும் படிக்க | ஆடு, மாடு பண்ணை அமைக்கு சூப்பர் வாய்ப்பு - தமிழ்நாடு அரசு கொடுத்த லேட்டஸ்ட் குட்நியூஸ்

மேலும் படிக்க| கால்நடை பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் கடன், மானியம் கொடுக்கும் தமிழ்நாடு அரசு - உடனே விண்ணப்பிக்கவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News