)
Minsiter I periyasamy: திண்டுக்கல் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மறவபட்டி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, கருணாநிதி, அண்ணா ஆகியோர் காமராஜர் அவர்கள் குடியாத்தம் தொகுதியில் போட்டிபோடும் பொழுது திமுக போட்டி போடவில்லை. பச்சைத் தமிழர் வெற்றி பெற வேண்டும் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று ஏற்றுக்கொண்ட இயக்கம் திமுகவும் அண்ணாவும் தான். அதே வழியில் தான் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும். காமராஜர் உழைப்பு, தியாகத்தை மதிக்கக்கூடிய ஒரே ஒரு இயக்கம், ஒரே ஒரு தலைவர் ஸ்டாலின் மட்டுமே.
அடுத்த முறை ஆட்சிக்கு வருவோம் என எடப்பாடி பழனிசாமி பொய் சொல்லி வருகிறார். பொய் எவ்வளவு நாள் சொல்ல முடியும் என்று தெரியவில்லை. 10 முறை பொய் கூறினால் உண்மையாகும் என எடப்பாடி நினைக்கிறார். அது நடக்காது. நான்காண்டுகளில் கிடைக்காத சலுகைகளை மக்களுக்கு வீடு தேடிச்சென்று கிடைக்கச் செய்யும் பணியை முதல்வர் மேற்கொண்டு வருகிறார். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு நமது முதல்வர் கொண்டு வந்துள்ளார். அத்தனை துறையும் ஒரே இடத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. எல்லா நிவாரணமும் கிடைக்கும். புறம்போக்கில் குடி இருக்கிறேன் பட்டா வேண்டும் என்றால் உடனே கொடுத்து வருகிறோம். வீடுகள் கட்டி தந்து வருகிறோம்.
காமராஜர் இறந்தபின் அவருக்கு இரவு பகலாக தூங்காமல் கவர்னர் மாளிகையில் இடம் ஒதுக்கீடு செய்து அங்கு உள்ள மரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு அதற்கான இடத்தை தேர்வு செய்து நினைவு மண்டபம் கட்டுவதற்கு இடம் கொடுத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்பது அனைவருக்கும் தெரியும். காமராஜர் நாளை கல்வி நாளாக அறிவித்து விடுமுரை விட்டு வருகிறோம். அவரது புகழை போற்றி கொண்டிருக்கின்ற ஒரே இயக்கம் திமுக தான் என கூறினார்.
தொடர்ந்து அமைச்சர் ஐ. பெரியசாமியிடம், பள்ளி ஆசிரியர் இரண்டாவது நாள் வேலை நிறுத்தம் குறித்த கேள்விக்கு, முதலமைச்சர் ஏற்கனவே சட்டமன்றத்தில் கூறியுள்ளார். அவர்களது ஓய்வூதியம் அதற்கான கமிட்டி அமைத்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது விரைவில் நல்ல முடிவு வரும் என தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ