)
தமிழ்நாட்டு பெண்களை தொழில் அதிபர்களாக மாற்றும் நோக்கில், தமிழக அரசு ஒரு புதிய மற்றும் புரட்சிகரமான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 'தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்' (Tamil Nadu Women Entrepreneur Empowerment Scheme - TWEES) என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம், சொந்தக்காலில் நிற்க விரும்பும் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் பெண்களை தொழில் முனைவோராக உருவாக்குவதே இத்திட்டத்தின் லட்சியமாகும்.

வழக்கமாக தொழில் தொடங்க கடன் வாங்குவது பெண்களுக்கு ஒரு சவாலான விஷயமாக இருக்கும். சொத்து அடமானம், அதிக வட்டி போன்ற சிக்கல்கள் அவர்களை தயங்க வைக்கும். ஆனால், இந்த திட்டத்தில் அந்த கவலைகள் இல்லை. புதிதாக தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு ரூ. 10 லட்சம் வரை வங்கி கடன் வழங்கப்படுகிறது. வாங்கும் கடனில் 25% தொகையை (அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வரை) அரசே மானியமாக செலுத்திவிடும். மீதமுள்ள தொகையை மட்டும் பெண்கள் திருப்பி செலுத்தினால் போதும். இத்திட்டத்தில் கடன் பெற எந்தவிதமான சொத்துக்களையும் பிணையமாக வைக்கத் தேவையில்லை. மொத்த திட்ட மதிப்பீட்டில் வெறும் 5% தொகையை மட்டும் விண்ணப்பதாரர் முதலீடு செய்தால் போதும்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பெரும்பாலான தொழில்களுக்குக் கடன் கிடைக்கும். உதாரணமாக அழகு நிலையம், தையல் தொழில், எம்பிராய்டரி, கேட்டரிங், பேக்கரி, மக்கும் பொருட்கள் தயாரிப்பு, பொம்மை தயாரிப்பு, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை, ஜிம், யோகா மையம் போன்ற தொழில்களுக்கு கடன் கிடைக்கும். நேரடி விவசாயம், ரியல் எஸ்டேட், கட்டிட தொழில், வாகனங்கள் வாங்குதல் போன்றவற்றிற்கு அனுமதி கிடைக்காது.
வெறும் கடன் கொடுப்பதோடு நின்றுவிடாமல், அந்த தொழிலை எப்படி வெற்றிகரமாக நடத்துவது என்பதற்கான பயிற்சியையும் அரசே வழங்குகிறது. தொழில் வணிக திட்டம் தயாரித்தல், நிதி மேலாண்மை, மார்க்கெட்டிங் உத்திகள் குறித்து 3 நாட்களுக்கு ஆன்லைன் மூலம் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். விருப்பமும் தகுதியும் உள்ள பெண்கள் [www.msmeonline.tn.gov.in/twees](http://www.msmeonline.tn.gov.in/twees) என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மாவட்ட அளவில் உள்ள தேர்வு குழுவால் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான விண்ணப்பங்கள் வங்கிகளுக்குபரிந்துரைக்கப்படும்.
தேவையான ஆவணங்கள்
ஆதார் அட்டை, ரேஷன் கார்டு.
சாதி சான்றிதழ், இருப்பிட சான்று.
கல்வி சான்றிதழ் (இருந்தால்).
திட்ட மதிப்பீடு (Project Report).
பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
வங்கி கணக்கு விவரங்கள்
பெண்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரம் அடைந்தால் தான் ஒரு குடும்பம் மற்றும் சமூகத்தின் வளர்ச்சி முழுமையடையும். இந்த திட்டம் உள்ளூரிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் உதவும். 'கலைஞர் கைவினைத் திட்டத்தின்' கீழ் ஏற்கனவே கடன் பெற்றவர்களும், கூடுதல் நிதிக்காக (இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு. மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை (DIC) அணுகலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ