ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை... அலங்காநல்லூரில் முதல்வர் மெகா அறிவிப்பு

MK Stalin: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்நிகழ்ச்சிலேயே இரண்டு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

Written by - Sudharsan G | Last Updated : Jan 17, 2026, 01:13 PM IST
ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை... அலங்காநல்லூரில் முதல்வர் மெகா அறிவிப்பு

Alanganallur Jallikattu 2026, MK Stalin: பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பது வாடிக்கையாகும். தைப் பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. தொடர்ந்து, மாட்டுப் பொங்கல் பண்டிகையான நேற்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றனர்.

Add Zee News as a Preferred Source

Alanganallur Jallikattu 2026: 1100 காளைகள், 550 வீரர்கள்

1100 காளைகள், 550 மாடுபிடி ஆன்லைன் மூலம் டோக்கன் பெற்று முன்பதிவு செய்துள்ளனர். இதில் ஒவ்வொரு சுற்றுக்கும் 50 வீரர்கள், 100 காளைகள் வீதம் அனுப்பப்படும். முதல்கட்டமாக 11 சுற்றுகள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுகளிலும் அதிக காளைகளை பிடிப்பவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பின்னர் 11 சுற்றுகளிலும் சிறப்பாக விளையாடி தேர்வான மாடுபிடி வீரர்கள் மட்டும் இறுதிச்சுற்றில் பங்கேற்பார்கள்.

Alanganallur Jallikattu 2026: எக்கச்சக்க பரிசுகள்

இதில் அதிக காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடி வீரருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கும் கார் பரிசாக வழங்கப்படும். சிறந்த காளைக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் டிராக்டர் பரிசாக வழங்கப்படும். இரண்டாவது பரிசாக பைக், மூன்றாவது பரிசாக ஸ்கூட்டி பரிசு வழங்கப்பட உள்ளது. போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து காளைகளுக்கும் தங்க காசு வழங்கப்படுகிறது. மிக்சி, மெத்தை, சைக்கிள், கிரைண்டர், கட்டில், குக்கர், அண்டா போன்ற ஏராளமான பரிசுகளும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் வழங்கப்படுகிறது.

Alanganallur Jallikattu 2026: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

இன்றைய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கண்டுகளித்தார். அப்போது வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும் தங்க மோதிரம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கி அவர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தார். அந்த வகையில் அவர் போட்டியின் இடையே ஜல்லிக்கட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், காளைகள் வளர்ப்போரை ஊக்குவிக்கும் வகையிலும் முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு முக்கிய அறிவிப்புகளை மேடையிலேயே வெளியிட்டார்.

Alanganallur Jallikattu 2026: அரசு வேலை

அதன்படி, ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிக காளைகளை அடக்கி சிறந்த வீரராக விளங்குவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்புத் துறையில் அரசு வேலை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். மேலும், அலங்காநல்லூரில் ரூ.2 கோடி மதிப்பில் பயிற்சி மையம் மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்புக்கு அங்கு கூடியிருந்த மக்கள் பலத்த வரவேற்பை அளித்து நன்றியும் தெரிவித்தனர். மாடுபிடி வீரர்களின் நீண்டநாள் கோரிக்கையை தமிழ்நாடு அரசு இன்று அறிவித்திருப்பது பல்வேறு தரப்பில் பாராட்டை பெற்றிருக்கிறது.   

மேலும் படிக்க | பாலமேடு ஜல்லிக்கட்டு: சிறந்த காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு... என்னென்ன பரிசுகள் கிடைக்கும்?

மேலும் படிக்க | பாலமேடு ஜல்லிக்கட்டு: தொடங்குவதில் தொடர் தாமதம்... மக்கள் ஆவேசம்- உதயநிதி காரணமா?

மேலும் படிக்க | அவனியாபுரத்தில் மாடுபிடி வீரரை தூக்கி வீசிய காளை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News