சொத்து, விபத்து, நிலப்பிரச்சனை, காசோலை வழக்குகளுக்கு உடனடி தீர்வு வேண்டுமா? இதோ குட் நியூஸ்

Villupuram : நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் பல்வேறு வகை பிரச்சனைகளுக்கான வழக்குகளுக்கு சமரச தீர்வு காணும் வகையில் தேசிய மக்கள் நீதிமன்றம் விழுப்புரத்தில் நடைபெற இருக்கிறது.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Mar 2, 2025, 07:28 AM IST
  • நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் வழக்குகள்
  • சொத்துப் பிரச்சனை, மோட்டார் விபத்து உள்ளிட்ட வழக்குகள்
  • மார்ச் 8 ஆம் தேதி உடனடி தீர்வு கிடைக்க வழி உள்ளது
சொத்து, விபத்து, நிலப்பிரச்சனை, காசோலை வழக்குகளுக்கு உடனடி தீர்வு வேண்டுமா? இதோ குட் நியூஸ்

Villupuram news : இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விழுப்புரத்தில் வரும் 8 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, : மாண்புமிகு தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு, சென்னை அவர்களின் வழிக்காட்டுதலின் படி, விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆனைக்குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான திரு./A.மணிமொழி, B.A., L.L.B., அவர்களின் வழிக்காட்டுதலின்படி மற்றும் தலைமையின் கீழ் 08.03.2025 (சனிக்கிழமை) விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஏழு அமர்வுகள் நடைபெற உள்ளது. 

Add Zee News as a Preferred Source

இதேபோல், கள்ளக்குறிச்சி, செஞ்சி, திண்டிவனம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், வானூர், விக்கிரவாண்டி மற்றும் திருவெண்ணெய்நல்லூர் ஆகிய நீதிமன்றங்களில் உள்ள வட்ட சட்டப்பணிகள் குழுவின் மூலம் 18 அமர்வுகள் இருக்கும். இங்கு மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை வழக்குகள், நில பிரச்சணை தொடர்பான வழக்குகள், வங்கிக் கடன் சம்பந்தமான நீதிமன்ற வழக்குகள், குடும்ப நல வழக்குகள் மற்றும் சமரச முறையில் தீர்வு காணக்கூடிய வழக்குகள் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சமரச முறையில் தீர்வுகாண வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இங்கு நிலுவையில் உள்ள வழக்குகளை தவிர புதிதாக தாக்கல் செய்ய தகுதியுடைய வழக்குகள் மற்றும் பிரச்சனைகளுக்கும் சமரச முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணும் வழக்குகளுக்கு ஏற்படும் நன்மைகள் என்னவென்றால் முத்திரைத்தாள் வாயிலாக செலுத்திய கட்டணம் திரும்ப பெரும் வாய்ப்பு, வழக்குகள் தீர்வு கண்டதும் அதற்கான தீர்ப்பு நகல் உத்தரவு உடனே வழங்கப்படும். மக்கள் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பிள் மீது மேல்முறையீடு செய்ய இயலாது. 

மக்கள் நீதிமன்றத்தில் வழக்கில் வென்றவர் தோற்றவர் என்ற வேறுபாடு இருக்காது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்காளர்களுக்கு செலவின்றி விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள், வழக்கறிஞர்கள் அனைவரும் 08.03.2025 அன்று நடைபெறும் தேசிய மக்கள் நீதி மன்றத்தில் கலந்துகொண்டு சமரசமாக தங்கள் வழக்குகளுக்கு தீர்வு காணும் படி இந்த பத்திரிக்கைச் செய்தியின் வாயிலாக கேட்டுக்கொள்ளப்படுகிறது என விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான திரு.A.மணிமொழி, B.A., L.L.B, அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும படிக்க | 12ம் வகுப்பு முடித்தால்... ரூ.70,000 வரை சம்பளம் கிடைக்கும்; தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்

மேலும் படிக்க | சென்னை நிர்வாக எல்லைகள் மாற்றி அமைப்பு.. புதிதாக 6 மண்டலங்கள் உருவாக்கம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News