தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

Local Holiday Declared in Tamil Nadu: அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 28, 2025, 10:43 AM IST
தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

Tamil Nadu Latest News: தமிழகத்தில் இருக்கும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து வகையான அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பானது வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பு எந்த மாவட்டங்களுக்கு பொருந்தும் மற்றும் எதற்காக விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது போன்ற விவரங்களை தெரிந்துக்கொள்ளுவோம்.

Add Zee News as a Preferred Source

பொது விடுமுறை பட்டியல்

பொதுவாகவே ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் விடுமுறை பட்டியலை வெளியிடுவார்கள். அதாவது வருடம் முழுவதும் எந்தெந்த நாட்கள் அரசு பொது விடுமுறை நாட்களாக இருக்கும் என்ற ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவது வழக்கம்.

மத்திய அரசு பொது விடுமுறை பட்டியல்

மத்திய அரசாங்கத்தின் விடுமுறை பட்டியல் என்பது நாடு முழுவதும் பொருந்தும் படியாக இருக்கும். உதாரணத்துக்கு "காந்தி ஜெயந்தி" எடுத்துக்கொண்டால், அது நாடு முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களுக்கும் விடுமுறை நாளாக இருக்கும். 

தமிழக அரசு பொது விடுமுறை பட்டியல்

அதேபோல் தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிடப்படும் பொது விடுமுறை பட்டியல் என்பது தமிழகத்திற்கு மட்டும் பொருந்தும். உதாரணத்துக்கு "தமிழ் வருட பிறப்பு" எடுத்துக்கொண்டால், அது தமிழகத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கு மட்டும் பொருந்தும். தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் அன்றைய தினம் விடுமுறையாக இருக்கும். 

ஸ்பெஷல் பண்டிகை கால விடுமுறை

மத்திய, மாநில ஆண்டு விடுமுறை பட்டியலை அடுத்து, ஒரு சில ஸ்பெஷல் பண்டிகை காலத்தில், தேவைப்பட்டாலும் அந்தந்த மாநில அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக மாநிலம் முழுவதும் பொருந்தக்கூடிய வகையில ஒரு சில பொது விடுமுறை அறிவிப்புகளும் அறிவிக்கப்படும். உதாரணத்துக்கு "தை பொங்கல்" எடுத்துக்கொண்டால், பண்டிகை காலம் என்பதால், அரசு தரப்பில் எக்ஸ்ட்ரா விடுமுறை அளிக்கப்படும். இந்த விடுமுறையும் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறையாக இருக்கும். 

உள்ளூர் விடுமுறை என்றால் என்ன?

இதையெல்லாம் தவிர்த்து விடக்கூடிய இன்னொரு விடுமுறைதான் "உள்ளூர் விடுமுறை" உள்ளூர் விடுமுறை என்பது அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்களால், அந்தந்த மாவட்டத்திற்கு மட்டும் பொருந்தக்கூடிய விடுமுறையாக அறிவிக்கப்படும். அதாவது சில மாவட்டக்களில் மட்டும் கொண்டாடப்படும் விழா, ஜெயந்தி மற்றும் மழை, புயல் குறிப்பிட்ட மாவட்டத்திற்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்படும். அதுதான் "உள்ளூர் விடுமுறை" ஆகும். 

ஐந்து மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை

தற்பொழுது தமிழகத்தில் சில மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. அதாவது வருகின்ற மார்ச் மாதம் நான்காம் தேதி தமிழகத்தில் இருக்கக்கூடிய ஐந்து மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

அய்யா வைகுண்டர் அவதார தினம் விடுமுறை

அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு மார்ச் 4 ஆம் தேதி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இருக்கக்கூடிய அனைத்து வகையான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் அதிகாரப்பூர்வமான உத்தரவை பிறப்பித்துள்ளார்கள். 

தென் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை

சுவாமி அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் மாதம் நான்காம் தேதி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது வரும் மார்ச் 4 ஆம் தேதி அய்யா வைகுண்டரின் 190வது அவதார தினம் வெகு விமரிசையாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறன. இதனையடுத்து மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவை பிறப்பித்துள்ளனர். 

அரசு நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படாது

எனவே இந்த நான்கு மாவட்டங்களான தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இருக்கக்கூடிய எந்த வகையான ஒரு அரசு நிறுவனங்களோ அல்லது தனியார் பள்ளி, கல்லூரிகளோ செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

விழுப்புரம் மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை

அதேபோல விழுப்புரம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மார்ச் மாதம் 4 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் விடுமுறை என விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. விடுமுறை தினத்தை ஈடுசெய்வதற்காக மார்ச் 15 ஆம் தேதி வரக்கூடிய சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

தற்போது வரைக்கும் தமிழகத்தில் வரும் மார்ச் 4 ஆம் தேதி மொத்தம் ஐந்து மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க - LIVE கைது செய்யப்படுவாரா சீமான்? மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்; திட்டமிட்டபடி உண்ணாவிரதம்!

மேலும் படிக்க - இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

மேலும் படிக்க - மார்ச் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: எல்பிஜி சிலிண்டர், அகவிலைப்படி, UPI, FD விதிகள்.... முழு லிஸ்ட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News