)
Google AI And Data Center, Visakhapatnam vs Chennai: இந்தியாவின் டிஜிட்டல் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், முக்கிய அறிவிப்பு ஒன்று நேற்று (அக். 14) அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருந்தது. ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் கூகுள் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு மற்றும் டேட்டா மையத்தை நிறுவ இருக்கிறது.
இந்த அறிவிப்பை கூகுள் கிளவுட் கிளோபல் சிஇஓ தாமஸ் குரியன் வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், "விசாகப்பட்டினத்தில் ஒரு புதிய ஜிகாவாட் அளவிலான (பிரம்மாண்ட) AI மையத்தை அமைக்க இருப்பதை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அமெரிக்காவிற்கு வெளியே உலகில் எங்கும் நாங்கள் முதலீடு செய்யப் போகும் மிகப்பெரிய AI மையம் இதுவாகும்" என்றார். மேலும், "இதற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் மூலதன முதலீடு ஒதுக்கப்படும் என்றார். மேலும், இம்மையம் பல ஜிகாவாட்களாக அளவிடப்படும் என்றார்.
Delighted by the launch of the Google AI Hub in the dynamic city of Visakhapatnam, Andhra Pradesh.
— Narendra Modi (@narendramodi) October 14, 2025
This multi-faceted investment that includes gigawatt-scale data center infrastructure, aligns with our vision to build a Viksit Bharat. It will be a powerful force in… https://t.co/lbjO3OSyMy
மேலும் தாமஸ் குரியன், நாங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை மட்டும் இங்கு கொண்டு வரவில்லை எங்களின் 'கடலுக்கு அடியில் கேபிள் மற்றும் நெட்வொர்க் இணைப்பு மையம்' மூலம் டிஜிட்டல் உள்கட்டமைப்பையும் அங்கு உருவாக்குகிறோம் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
விசாகப்பட்டினத்தில் அமைக்கப்பட உள்ள இந்த AI மையம், 12 நாடுகளில் பரவியிருக்கும் கூகுள் நிறுவனத்தின் உலகளாவிய AI மையங்களின் வலையமைப்பின் ஒரு பகுதியாக அமையும். கூகுள் அதன் கடல்சார் கேபிள் உள்கட்டமைப்பை அங்கு ஏற்படுத்தி, அதன் உலகளாவிய நெட்வொர்க்கில் ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளதால், விசாகப்பட்டினம் ஒரு முக்கிய இணைப்பு மையமாக மாற உள்ளது.
Thank you, Hon’ble Governor Garu. The launch of the Google AI Hub is a defining moment for Andhra Pradesh and India’s digital growth. This achievement belongs to every citizen of Andhra Pradesh. https://t.co/XbOgegt3Gt
— N Chandrababu Naidu (@ncbn) October 14, 2025
'இது தங்களுக்கு ஊக்கமளிக்கும் காலகட்டம்' என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூகுள் AI மையத்தை குறிப்பிட்டு பேசியிருந்தார். ஹைதராபாத் நகரை இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப மையாமாக வளர்த்தெடுத்த பெருமை சந்திரபாபு நாயுடுவுக்கு இருப்பதுபோல், தற்போது அவரது மகன் நாரா லோகேஷ் விசாகப்பட்டினத்தை AI மையத்தை அமைக்க சிறப்பான முன்னெடுப்பை எடுத்திருக்கிறார் என்பதை வெளிக்காட்டுகிறது.
ஒரு ஜிகாவாட் அளவிலான இந்த திட்டத்தின் முதல் கட்டப்பணி 10 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை உள்ளடக்கியது என்றும் ஒரு வருட தீவிர விவாதங்கள் மற்றும் இடைவிடாத முயற்சியின் பலனாக இது விசாகப்பட்டினத்திற்கு கிடைத்திருக்கிறது என்றும் நாரா லோகேஷ் கூறியிருந்தார்.
இந்தச் சூழலில் சென்னையில் ஏன் இந்த கூகுள் AI மையம் அமையவில்லை என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மத்தியில் பாஜக ஆட்சி அமைய முக்கிய அங்கமாக இருந்ததன் காரணத்தால், ஆந்திராவுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதிருப்பதாகவும் கூறப்படுகிறது. எப்போதும் இதுபோன்ற முதலீடுகளை தான் ஆட்சிசெய்யும் குஜராத் போன்ற மாநிலங்களுக்குதான் மத்திய பாஜக அரசு ஒதுக்கும் என அரசியல் ரீதியாக எப்போதும் குற்றச்சாட்டு வைக்கப்படும் வேளையில், தற்போது பாஜக அதன் கூட்டணி கட்சிக்கு ஒரு பெரிய வாய்ப்பை வழங்கி உள்ளது. இதனால் கூட சென்னைக்கு இந்த திட்டம் வந்திருக்காது என்றும் பேசப்படுகிறது.
ஆனால், அரசியல் காரணங்கள் ஒருபுறம் இருக்க, சென்னையில் கூகுளின் இந்த பிரம்மாண்ட AI மையம் வராததற்கு இன்னும் சில முக்கிய காரணிகள் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆராய்ச்சியாளரும், வட ஆர்க்டிக் நார்வே பல்கலைகழகத்தில் உடல்நலத் தகவியல் துறையில் பணிபுரிபவருமான சேஷாத்ரி தனசேகரன் அவரது பேஸ்புக் பக்கத்தில், "விசாகப்பட்டினத்தில் கூகுள் அமைக்க இருக்கும் data center இந்தியாவிலேயே மிக பெரியது. ஏன் அதை விசாகப்பட்டினத்தில் அமைத்தார்கள்?" என விரிவாக பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, "முதல் விஷயம் சென்னையை விட விசாகப்பட்டினத்தில் நிலத்திற்கான விலை குறைவு. இந்தியாவின் ஆந்திரப் பிரதேச அரசு, விசாகபட்டினத்தில் தொழில்நிறுவனங்களுக்கு விரைவான அனுமதி, உடனடி நில ஒதுக்கீடு, மற்றும் பல உத்தரவாதங்களை வழங்கியுள்ளது. Data Center உருவாக்க முக்கிய கட்டுமான அனுமதி, நில விலைகள் ஆகியவை சென்னைவிட இருமுறை குறைந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
(ஆந்திர) மாநில அரசு டேட்டா மையங்கள், AI Campus மற்றும் தொழில்நிறுவனங்களுக்கு கட்டுமானம், நில, மின், மற்றும் வேலைவாய்ப்பு வழிகளில் முன்னிலை வழங்குகிறது. சென்னையில் bureaucratic (அரசு நிர்வாகம் சார்ந்த) தடைகள் மற்றும் முதலீட்டுத் தேவைகள் அதிகம். மின்சார கட்டணம் தற்போதைக்கு குறைவாக இருக்கிறது.Submarine cable fiber connectivity விசாகப்பட்டினத்தில் அமைக்க எளிதாக இருக்கிறது. Green energy focus விசாகப்பட்டினத்தில் சூரிய ஒளி, காற்று மற்றும் இந்த ப்ராஜெக்ட் முழுக்க அதானியின் கிரீன் எனர்ஜி நிறுவனமும் கை கோர்த்து செய்கிறார்கள்" என்கிறார்.
மேலும், நாரா லோகேஷை சந்திரபாபு நாயுடு போல் மக்கள் செல்வாக்கு நிறைந்த தலைவராக நிலைநிறுத்தவும் இத்திட்டம் உதவலாம் என அவர் சுட்டிக்காட்டுகிறார். இதுகுறித்து அவரது பதிவில், "எல்லாவற்றுக்கும் மேல் நாரா லோகேஷின் popularity (செல்வாக்கு) மற்றும் தலைவராக நிலைநிறுத்தவும் இதை மிக நுட்பமாக ஆந்திரா மாநிலத்தில் அமைத்து இருக்கிறார்கள். எப்படி ஹைதராபாத் ஹைடெக் நகரத்தை நான் (சந்திரபாபு நாயுடு) வடிவமைத்தேனோ அதே போல என் மகன் இதை செய்து இருக்கிறான் என்று நிலை நிறுத்த உதவும்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சென்னையில் நிலவும் சிக்கல்கள் குறித்தும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். "சென்னையின் core IT நிறுவனங்கள், சென்னையை விட்டு விலகிதான் சென்று கொண்டு இருக்கின்றன. மிக முக்கிய காரணம் நிலத்தின் விலை மற்றும் நகரத்தில் கிடைக்கும் amenities (வசதிகள்). சென்னையில் அது இல்லையா என்றால், nightlife என்ற ஒன்றே இல்லாமல் தான் இருக்கிறது சென்னை" என்கிறார்.
அதாவது, தற்போதைய நவீன காலகட்டத்தில் பெருநகரங்கள் இரவிலும் துடிப்போடு இயங்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. பகலில் கிடைக்கும் வசதிகளும், சேவைகளும் நள்ளிரவில் கூட தடைப்படாமல் கிடைக்க வேண்டும். இரவு நேரத்திலும் சட்ட ஒழுங்கு சிறப்பாக இருந்து, நகரம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். ஆனால், இந்த விஷயங்களில் சென்னை நகரம் பின்தங்கியே இருக்கிறது. தமிழ்நாடு அரசு விரைந்து முதலீட்டு கொள்கையில் மாற்றம் கொண்டுவந்து, இதுகுறித்து செயல்படாவிட்டால் சென்னையின் முதலீடுகள் சரியவும் வாய்ப்பிருக்கிறது என பலரும் எச்சரிக்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ