)
TN Govt Jobs 2025: அரசு வேலை வாய்ப்பு எதிர்நோக்கி இருப்பவர்கள் தகுதியும், விருப்பமும் இருந்தால் தருமபுரி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள அரசு காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும். ஒவ்வொரு மாவட்டத்திலும் காலிப் பணியிடத்துக்கு ஏற்ப கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு முன்னுரிமை ஆகியவை மாறுபடும். எனவே, விண்ணப்பதாரர்கள் அரசு சார்பில் கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து நிபந்தனைகளையும் கவனமாக படித்து, உரிய தகுதி இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்கவும்.
தருமபுரி வேலைவாய்ப்பு
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கும், தருமபுரி மாவட்டம், ஆர், கோபிநாதம்பட்டி, அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லம் மற்றும் பஞ்சப்பள்ளி, அரசினர் குழந்தைகள் இல்லம், ஆகிய இரண்டு இல்லங்களில் தங்கி கல்வி பயில நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துநர் மூலம் மதிப்பூதியம் அடிப்படையில் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பதவிக்கு தகுதியான சமூகப்பணி/சமூகவியல்/உளவியல்/பொதுசுகாதாரம் மற்றும் ஆற்றுப்படுத்துதலில்(Counselling) முதுகலைப்பட்டம் பெற்ற பெண் மற்றும் ஆண் நபர்கள் மட்டும் அவர்களது விண்ணப்பங்களை உரிய கல்வி சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் தேர்வு குழு மூலம் நேர்முக தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
ஆர்.கோபிநாதம்பட்டி, அரசு குழந்தைகள் இல்லத்திற்கு 2 பெண் பணியிடத்திற்கும் பஞ்சப்பள்ளி, அரசினர் மாணவர் இல்லத்திற்கு 2 ஆண் பணியிடத்திற்கும் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படும் ஆற்றுப்படுத்துநருக்கு வருகையின் அடிப்படையில் ஒரு வருடத்திற்கு 324 நாட்களுக்கு (ஒரு மாதத்திற்கு ஒரு ஆற்றுப்படுத்துநருக்கு 9 பணி நாட்கள் வீதம்) மிகாமல் மதிப்பூதியம் அடிப்படையில் ஒரு வருகைக்கு போக்குவரத்து செலவு உட்பட ரூ.1000/- மட்டும் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை தருமபுரி மாவட்ட dharmapuri.nic.in, இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கண்காணிப்பாளர், அரசு குழந்தைகள் இல்லம், ஆர். கோபிநாதம்பட்டி, மற்றும் கண்காணிப்பாளர், அரசினர் குழந்தைகள் இல்லம், பஞ்சப்பள்ளி, என்ற முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாக -08.07.2025- மாலை 5.00 மணிக்குள் வழங்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
கரூர் வேலை வாய்ப்பு
கரூர் மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின்கீழ் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (OSC-181) தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் 24X7 பணிபுரிய தகுதியான நபர்கள் தங்களது சுய விபரங்களை தட்டச்சு செய்து 07.072025 பிற்பகல் 05.45 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலர். மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கரூர் மாவட்டம் என்னும் முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றன. இப்பதவிக்கான
மாதிரி விண்ணப்பம் கரூர் மாவட்ட இணையதளத்தில் https://karur.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
பதவி-வழக்கு பணியாளர் (Case Worker)
- கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்
- முதுநிலை சமூகபணி. உளவியல், வளர்ச்சிப் பணிகள், சமூகவியல் ஆகிய ஏதேனும் ஒன்றில் முதுநிலை பட்டதாரி / பட்டதாரி பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
- அரசு, அரசுசாரா தொண்டு நிறுவனங்களில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- பெண்கள் மட்டுமே விண்ணப்பிக் தகுதியுடையவராவர்.
- 40 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
- சுழற்சிமுறையில் பணியாற்றிட வேண்டும் (3X8).
- மாத ஊதியம் ரூ.18.000/- (ரூபாய் பதினெட்டாயிரம் மட்டும்) வழங்கப்படும்
பெரம்பலூர் வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்,
கல்வி தகுதி: 8.ஆம் வகுப்பு தேர்ச்சி
இட ஒதுக்கீடு: பொதுப்பிரிவு: கொரானோ தொற்றினானோ, இதர காரணங்களாலோ, பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள் (மகன்'மகள்) (அரசாணை (நிலை) எண்.8, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்த (ஆர்) துறை நாள்: 10.01.2020-ல் தந்தையையும் தாயையும் இழந்த வாரிகதாரர்களுக்கு வழங்கப்பட்ட முன்னுரிமை இவ்வினத்தில்சேர்க்கப்பட்டுள்ளது). முன்னுரிமை அளிக்கப்படும்.
பணியிட எண்ணிக்கை - 1
வயது வரம்பு 01/07/2023-ல் வயது வரம்பு குறைந்த பட்சம் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும், அதிகபட்ச வயது 32 ஆகும், மேலும் அதிகபட்ச வயது வரம்பு தளர்வு, தமிழ்நாடு அரசு பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016ன் படி இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அதற்கான படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டு, பதிவு தபால் மூலமாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
புகைப்படத்தை விண்ணப்பத்தில் அதற்கென குறிப்பிட்டுள்ள இடத்தில் ஒட்ட வேண்டும். புகைப்படத்தின் மேல்புறம் சய சான்றொப்பமிட வேண்டும். புகைப்படத்தை விண்ணப்பத்தில் பின் அடித்து இணைக்கக் கூடாது.
5. உரிய முறையில் கய சான்றொப்பமிட தேவையான சான்றாவனங்களின் நகல்களை மட்டுமே விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் அசல் சான்றாவணங்கள் இணைக்கப்படக்கூடாது.
முழுவதுமாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சுயவிலாசமிட்ட ரூ.50/- க்கான அஞ்சல் வில்லைகள் ஒட்டப்பட்ட உறையுடன் இவ்வலுவலகத்திற்கு பதிவுத் தபால் மூலமாக 11.07.2025 மாலை 5.45 மணிக்குள் கிடைக்கத்தக்க அளவில் கீழேகண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 11.07.2025 அன்று மாலை 5.45 மணிக்குமேல் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். நேர்காணல் மூலமாக மேற்கண்ட காலியிடம் நிரப்பப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி: தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், 2வது தெரு, கணபதிநகர், எளம்பலூர் ரோடு, பெரம்பலூர்-621 212.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தவறான தகவல்கள் கொண்டுள்ள விண்ணப்பங்கள் முற்றிலும் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பத்தரார்களின் அடையாள மற்றும் இருப்பிட சான்றுக்காக கீழே குறிப்பிட்டுள்ள ஆவணங்களின் புகைப்பட நகல்களை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். (கல்வி தகுநீர் சான்று, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆதார் அட்டை)
நேர்காணல் தேதியும், மணியும் தங்களுக்கு தொலைபேசியில் குறுஞ்செய்தி மூலம பின்னர் அறிவிக்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ