Tamil Nadu govt jobs : தமிழ்நாட்டில் ஈரோடு, திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிட விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். தகுதியிருப்பவர்கள் இந்த வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஈரோடு
தகவல் தொழிற் நுட்ப பணியாளர் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா IT assistant for PMMVY Scheme - காலிப்பணியிடம் -1. பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அரசு அல்லது அரசு சாரா/ஐடி சார்ந்த நிறுவனங்களுடன் மாநில அல்லது மாவட்ட அளவில் தரவு மேலாண்மை (data management) செயல்முறை ஆவணங்கள் மற்றும் வெப் அடிப்படையிலான ரிப்போர்டிங் பார்மேட்டில் குறைந்தபட்சம் 3 வருட அனுபவத்துடன் கணினிகள்/ஐடி போன்றவற்றில் பணி அனுபவம் இருக்க வேண்டும் . வயது: 35 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும். சம்பளம் - ரூ. 20,000
தகவல் தொழிற்நுட்ப பணியாளர் மிஷன் சக்தி திட்டம் (IT assistant mission Shakti) - காலிப்பணியிடம் -1. பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அரசு அல்லது அரசு சாரா/ஐடி சார்ந்த நிறுவனங்களுடன் மாநில அல்லது மாவட்ட அளவில் தரவு மேலாண்மை (data management) செயல்முறை ஆவணங்கள் மற்றும் வெப் அடிப்படையிலான ரிப்போர்டிங் பார்மேட்டில் குறைந்தபட்சம் 3 வருட அனுபவத்துடன் கணினிகள்/ஐடி போன்றவற்றில் பணி அனுபவம் இருக்க வேண்டும் . வயது: 35 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும். சம்பளம் - ரூ. 20,000
பல்நோக்கு உதவியாளர் (MTS) - காலிப்பணியிடம் -1. 10+2 முறையில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: 35 வயதுக்குக் கீழ் இருக்க வேண்டும். சம்பளம் - ரூ.12,000
இதற்கான விண்ணப்பங்கள் ஈரோடு மாவட்ட இணையதள முகவரி erode.nic.in யில் உரிய படிவம் மற்றும் தகுதிகள் குறித்த விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேற்காண் இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரியில் 12.07.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம் மாவட்ட ஆட்சியரகம்,6 வேது தளம்( பழைய கட்டடம்), ஈரோடு 638 011. தொலைபேசி எண்: 0424-2261405
ராமநாதபுரம்
இராமநாதபுரம் மாவட்டநலவாழ்வுசங்கத்தின் வழியாக இராமநாதபுரம் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்தின் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்தத்தின் முற்றிலும் தற்காலிகமாக பணியமர்த்திட தகுதியானவர்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. எதிர்காலத்தில் பணிவரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது. காலிப் பணியிடம் மற்றும் பணியிடத்திற்கான விண்ணப்பங்களை https://ramanathapuram.nic.in/ என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சித்தா அலுவலகம், விவேகானந்தர்சாலை கேணிக்கரை, இராமநாதபுரம்-62350. அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி 10 ஆம் தேதி மாலை 5.00 மணி வரை மட்டும் . அதன் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
திருச்சி
திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதார சங்கம் மூலம் துறையூர் மற்றும் உப்பிலியாபுரம் பகுதிகளுக்கான சிக்கள்செல் மற்றும் தலசீமியா மரபணு சாத்தியகூறு மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்க ஒரு Tribal Counsellor பணியிடம் ரூ.18,000/- மாத ஊதிய அடிப்படையில் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. மேற்காணும் பணியிடத்திற்கு விண்ணப்பம் மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், ரேஸ் கோர்ஸ் ரோடு, ஜமால் முகமது கல்லூரி அருகில், T.V.S. டோல்கேட், திருச்சிராப்பள்ளி என்ற முகவரியிலுள்ள அலுவலகத்தில் வருகின்ற 10.07.2025 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும் படிக்க | சென்னையில் அரசு அலுவலகத்தில் வேலை! உடனே விண்ணப்பிக்கவும்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









